- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியலுக்கு விஜய் வந்தால் தமிழ் சினிமா துறையினர் ஆதரவு கிடைக்குமா? - விஜயகாந்த், கமல் யார்...

அரசியலுக்கு விஜய் வந்தால் தமிழ் சினிமா துறையினர் ஆதரவு கிடைக்குமா? – விஜயகாந்த், கமல் யார் பாணியில் செல்லும் விஜய் அரசியல் பாதை…

- Advertisement -

தமிழக அரசியல் வரலாற்றில், சினிமாவில் இருந்து எம்ஜிஆரை போல யாருமே இதுவரை அரசியலுக்கு வந்து ஜெயித்தது கிடையாது என்பதுதான் வரலாற்று உண்மை. எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக தான் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

சிவாஜி கணேசன், டி ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், கார்த்திக் போன்றவர்களும் தமிழக அரசியலுக்கு வந்தவர்கள்தான். இதில் முதல் மூன்று பேரும், வந்த சுவடு தெரியாமல் காணாமல் போயினர்.மற்ற இருவரும் அரசியல் கட்சி குறித்து அவர்களே பேசினால்தான் உண்டு.

- Advertisement -

இதற்கிடையே 2000ம் ஆண்டுகளில் தமிழக அரசியலில் தேசிய திராவிட முன்னேற்ற கழகம் துவக்கி, மிகப்பெரிய வளர்ச்சியை கண்டவர் நடிகர் விஜயகாந்த். தேமுதிக என்ற அவரது கட்சி, 2வது தேர்தலை சந்தித்த போதே அதிமுக சட்டசபையில் எதிர்கட்சியாக அமைந்து சரித்திரம் படைத்தது. திமுகவை மூன்றாமிடத்துக்கு தள்ளியது.

ஆனால் உடல் நலமின்மை காரணமாக விஜயகாந்த் முடங்கிப் போனதால் அந்த கட்சியை பொறுப்பெடுத்துக்கொண்ட விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சுதீஷூம் விஜயகாந்த் காட்டிய வழியில் நடத்தாமல் கட்சியை இருக்கும் இடம் காணாமல் செய்து வருகின்றனர். அந்த கட்சியில் இருந்த பல நிர்வாகிகள் திமுக, அதிமுக என மாறிவிட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியை நடத்தி வரும் அரசியல்வாதி கமல்ஹாசன் பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். ஆனால், அவருக்கு அரசியல் பயணத்தில் எந்த நடிகரும் துணை நிற்கவில்லை. அவரது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த் கூட, கமலுக்கு ஓட்டுப்போடுங்கள் என ஆதரவு தரவில்லை. அரசியலில் இதுதான் நிதர்சனம் என்பது தெரியாமல் விஜய், அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்.

அதிமுக திமுக என இரண்டு கட்சிகளும் பல ஆயிரம் கோடி ரூபாய்களுடன் வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க வருகின்றனர். டிரெய்லர் திரையிட்ட தியேட்டர் சீட்களை உடைத்து, கிழித்த தனது ரசிகர் படையை நம்பி தேர்தல் களத்தில் இறங்குகிறார் விஜய். எந்த நடிகரும், நடிகையும் கைகோர்த்து விஜயுடன் தேர்தல் பிரசாரத்துக்கு வரப்போவது இல்லை. எந்த இயக்குநரும் அவருக்கு ஆதரவு தந்து அறிக்கை தரப்போவதும் இல்லை. இன்னொரு கமல்ஹாசனாக விஜய் அரசியல் பயணம் இருக்கும் என்கின்றனர், அரசியல் நிலவரம் தெரிந்த சினிமா விமர்சகர்கள்.

- Advertisement -

சற்று முன்