- Advertisement -
Homeபொழுதுபோக்குசொல்லி அடித்த கில்லியாக தளபதி விஜய் - வெற்றியை கொண்டாடும் சக சினிமா கலைஞர்கள், தொடர்ந்து...

சொல்லி அடித்த கில்லியாக தளபதி விஜய் – வெற்றியை கொண்டாடும் சக சினிமா கலைஞர்கள், தொடர்ந்து குவியும் வாழ்த்துகள்!

- Advertisement -

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்திருக்கிறார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி 2 ஆண்டுகளே நிறைவடைந்த நிலையில் 55 ஆண்டுகளை கடந்த அதிமுக 75 ஆண்டுகளை கடந்த திமுக என்ற 2 மாபெரும் கட்சிகளை வீழ்த்தி தமிழகத்தின் புதிய முதல்வராக விரைவில் பதவிேயேற்க இருக்கிறார்.

நடிகர் விஜய்க்கு பல நட்சத்திர நடிகர்கள் நடிகைகள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கும் அவரது கட்சியினருக்கும் எனது வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதேபோல் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் ராஜ்ய சபா எம்பி நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையை பெற்று பெரு வெற்றி பெற்றிருக்கும் தலைவர் விஜய்க்கும் அவரது கட்சியினருக்கும் எனது பாராட்டுக்கள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள் என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜீத்குமார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அஜீத்குமாரின் மனைவி ஷாலினியும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அதேபோல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிகர் மற்றும் இயக்குனர் தியாகராஜன் அவரது மகன் நடிகர் பிரசாந்த் உள்ளிட்டோர் நடிகர் விஜய்க்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான சிவக்குமார், தம்பி மக்கள் உன் மீது அசாத்திய நம்பிக்கையை வைத்து பெருமளவு வாக்களித்து முதலமைச்சர் ஆக்கி உள்ளனர். அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் தமிழ் மக்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க என் மனப்பூர்வமான ஆசிகள் என்று கூறியிருக்கிறார். நடிகர் சியான் விக்ரம், வாழ்த்துக்கள் நண்பா. நீங்கள் வரலாறு படைத்து விட்டீர்கள் என்று கூறியிருக்கிறார். நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கும் விஜய்க்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் நடிகர்கள் ரவி தேஜா மகேஷ் பாபு விஷால் ரவிமோகன் தனுஷ் கார்த்தி சிவகார்த்திகேயன் விக்ரம் பிரபு அருண் விஜய் சிலம்பரசன் விஜய் ஆண்டனி ராகவா லாரன்ஸ் சூரி ஜீவா சிபி சத்யராஜ் உதயா வைபவ் மற்றும் நடிகைகள் குஷ்பு காஜல் அகர்வால் வரலட்சுமி சரத்குமார் மஞ்சிமா மோகன் கீர்த்தி சுரேஷ் அம்பிகா மீனா கனிகா இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரகுமான் சந்தோஷ் நாராயணன் பாடகர் கிரிஷ் இயக்குனர்கள் பேரரசு கௌதம் மேனன் மாரி செல்வராஜ் தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்