- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோவாக மாறிய டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர், அபிஷன் ஜீவிந்த் நடித்த வித் லவ்...

ஹீரோவாக மாறிய டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர், அபிஷன் ஜீவிந்த் நடித்த வித் லவ் படம்… 3 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

- Advertisement -

நடிகர்கள் இயக்குனராக மாறுவதும் நடிகர்கள் இயக்குனராக மாறுவதும் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது. கே பாக்யராஜ் பாண்டியராஜன் பார்த்திபன் மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜன் சுந்தர் சி சீமான் சேரன் மிஷ்கின் என அந்த வரிசையில் இப்போது இயக்குனர் அபிஷன் ஜீவிந்தும் இணைந்து விட்டார்.

கடந்தாண்டில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். நடிகர் சசிக்குமார் நடிகை சிம்ரன் நடிப்பில் உருவான இந்த படம் சின்ன பட்ஜெட்டில் உருவான படம்தான். ஆனால் ரசிகர்களின் அமோக வரவேற்பு மற்றும் ஆதரவால் 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது.

- Advertisement -

இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர் இளங்கோ குமரவேல் ரமேஷ் திலக் யோகிபாபு போன்றவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்து படத்தின் திரைக்கதைக்கு வலு சேர்த்தனர். இலங்கை அகதி குடும்பமாக சசிக்குமார் சிம்ரன் நடித்திருந்தனர். இந்த படத்தில் சில காட்சிகளில் அபிஷன் ஜீவிந்தும் நடித்திருந்தார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் இயக்குனர் இப்போது ஹீரோவாக அறிமுகமான படம் வித் லவ். கடந்த 6ம் தேதி வித் லவ் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் பிரிமியர் ஷோவில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கலந்துக்கொண்டார். ஏனெனில் இது அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வித்லவ் படத்தை அறிமுக இயக்குனர் மதன் இயக்கி உள்ளார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இந்த படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். திருமணத்துக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் அந்த பெண்ணும் ஆணும் தங்களது பள்ளி காலத்தில் காதல் வயப்பட்ட சம்பவங்களை பேசிக்கொள்கின்றனர்.

அப்போது ஏற்பட்ட தங்களது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் அவர்கள் மீண்டும் அந்த பள்ளி கால காதலர்களை தேடி சந்திக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வருவதுதான் இந்த படத்தின் மைய கதைக்களமாக உள்ளது. இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. வித்லவ் படம் வெளியாகி 3 நாட்கள் கடந்த நிலையில் உலக அளவில் இந்த படம் இதுவரை 6 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்