- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசன் படத்தில் அந்த இளம் நடிகை நடிப்பது உறுதி - படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட...

அரசன் படத்தில் அந்த இளம் நடிகை நடிப்பது உறுதி – படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை தந்து வருபவர் வெற்றிமாறன். இதுவரை அவர் இயக்கிய பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் விசாரணை வடசென்னை விடுதலை விடுதலை 2 என 7 படங்களுமே பெரிய வெற்றிப் படங்கள்தான். இதில் விடுதலை 2 படம் மட்டுமே வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சற்று தொய்வை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் அரசன். கோவில்பட்டியில் இப்போது அரசன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை கலைப்புலி தாணு சொந்தமாக தயாரிக்கிறார்.வடசென்னை படத்தின் கிளை கதைக்களத்தில் அரசன் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தில் சமுத்திரக்கனி கிஷோர் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அரசன் படம் குறித்து சமீபத்தில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் எழுதிய கதையில் அந்த கேரக்டரில் என்னை நினைத்து எழுதியதாக சொன்னார். அந்த ஒரு காரணத்துக்காகவே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

கடந்த ஒரு வாரமாக கோவில்பட்டியில் அரசன் படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு விஜய் சேதுபதி வெற்றிமாறன் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த யோகலட்சுமியும் தாவணி பாவாடை அணிந்த கெட்டப்பில் சிலம்பரசன் அருகே நின்றிருக்கிறார்.

- Advertisement -

இதன்மூலம் அரசன் படத்தில் யோகலட்சுமியும் முக்கிய கேரக்டரில் நடிப்பது இப்போது உறுதியாகி உள்ளது. ஒருவேளை யோகலட்சுமிதான் சிம்புவுக்கு இந்த படத்தில் ஜோடியா, அவர்தான் நாயகியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவர் தாவணி பாவாடை கெட்டப்பில் இருப்பதால் ஒருவேளை சிம்புவுக்கு தங்கச்சியாக நடிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சசிக்குமார் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிக்குமாரின் மகனை காதலிக்கும் பக்கத்து வீட்டு பெண் கேரக்டரில் யோகலட்சுமி நடித்திருந்தார். இந்த ஆண்டில் வெளியாகி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் டூரிஸ்டை் ஃபேமிலி. அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த யோகலட்சுமி அரசன் படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்