நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெற உள்ளது. இவர்கள் திருமணம் ஏதேனும் ஒரு கோவிலில் நடக்கலாம். அல்லது புதிதாக திறக்கப்பட உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடத்தில் நடக்கலாம். அதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
ஒருவேளை பெற்றோர்கள் குடும்பத்தினர் விருப்பத்திற்காக விஷால் சாய் தன்ஷிகா திருமணம் பிரசித்தி பெற்ற கோவிலில் ஏதேனும் நடந்தாலும் திருமண வரவேற்பு விழா நிச்சயமாக நடிகர் சங்க மண்டபத்தில்தான் நடக்கும். ஏனென்றால் இதுகுறித்து ஏற்கனவே நடிகர் சங்க பொதுச் செயலாளரான நடிகர் விஷால் வாக்குறுதி தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் தன்ஷிகா பல படங்களில் நடித்திருக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் யோகி என்ற கேரக்டரில் ரஜினிக்கு மகளாக நடித்திருந்தார். அந்த படத்திலேயே சண்டை காட்சிகளில் அவர் நடித்திருந்தார். இப்போது யோகிடா என்ற படத்தில் அவர் நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சாய் தன்ஷிகா சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அந்தரத்தில் பறந்து ரவுடிகளை பந்தாடுகிறார். ஆக்சன் காட்சிகளில் பயங்கரமான ஆக்ரோஷத்தில் நடித்திருக்கிறார். சில காட்சிகளில் வைஜெயந்தி ஐபிஎஸ் விஜயசாந்தியை பார்ப்பது போன்ற பிரமையை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறார்.
தாமிரபரணி என்ற படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் விஷால், தன்னை கெட்டவன் என்று சொல்லி கொள்வார். அதுபோல் இந்த படத்தில் விஷாலின் வருங்கால மனைவியான சாய் தன்ஷிகாவும், கெட்ட பொண்ணுடா இந்த யோகி என்று தன்னை பற்றி பேசுவது போன்ற டயலாக் வருகிறது. மேலும் ஒரு காட்சியில் அவர் சிகரட் பற்ற வைத்து புகைப்பது போல் காட்டியிருப்பது ரசிகர்களை கொஞ்சம் ஓவரோ என யோசிக்க வைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து சண்டை படங்கள்தான் வருகின்றன. அதிலும் கதாநாயகிகள் சண்டை போடும் நிறைய ஆக்சன் படங்களும் வந்துவிட்டன. இதில் சாய் தன்ஷிகா அதிரடி நாயகியாக நடித்திருக்கும் யோகிடா படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்று படம் வெளியான பிறகே தெரியும். ஆனாலும் இப்போது வெளியான டிரெய்லர் அதிக கவனமும் வரவேற்பும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யோகிடா படத்தின் டிரெய்லரை காண இங்கே கிளிக் செய்யவும் –https://youtu.be/I3trBwcDYhg?si=XIIMy-pZ7asvS-yI





