- Advertisement -
Homeபொழுதுபோக்குயூத் படம் முதல் நாள் வசூல் நிலவரம் - ஹீரோவாக டைரக்டராக ஜெயித்தாரா இளம் நடிகர்...

யூத் படம் முதல் நாள் வசூல் நிலவரம் – ஹீரோவாக டைரக்டராக ஜெயித்தாரா இளம் நடிகர் கென் கருணாஸ்?

- Advertisement -

இன்றைய தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் பலர் வரிசையாக வந்துக்கொண்டு இருக்கின்றனர். இது ஆரோக்கியமான ஒரு வளர்ச்சியாக காணப்படுகிறது. ஏனெனில் ரஜினி கமல் இருவருமே 70 வயதுகளை கடந்து விட்டனர். 50 வயதுகளை கடந்த விஜய் அரசியலிலும் அஜீத்குமார் கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி அங்கு சென்று விட்டனர்.

அதன்பிறகு சிவகார்த்திகேயன் சூர்யா கார்த்தி தனுஷ் விஜய் சேதுபதி ரவிமோகன் போன்ற 2ம் நிலை ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். ஆனால் இவர்களது பல படங்கள் தோல்வி படங்களாக தான் இருக்கின்றன. இப்போதைக்கு சிவகார்த்திகேயன் தனுஷ் படங்கள் மட்டுமே வெற்றியை தருகின்றன.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழலில் பிரதீப் ரங்கநாதன் அதர்வா கவின்குமார் சிறை பட நடிகர் அக்‌ஷய் குமார் இப்போது யூத் படம் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகி உள்ள கென் கருணாஸ் போன்றவர்கள்தான் தமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரங்களாக உருவாக வாய்ப்புள்ளவர்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அசுரன் விடுதலை 2 வாத்தி போன்ற படங்களில் நடித்த கென் கருணாஸ் காமெடி நடிகர் கருணாஸ் – பாடகி கிரேஸ் தம்பதியின் மகன். இயக்குனர் வெற்றிமாறன் படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்த கென் கருணாஸ் இப்போது யூத் படம் வாயிலாக இயக்குனராக ஹீரோவாக களத்தில் குதித்திருக்கிறார்.

- Advertisement -

பள்ளி வாழ்க்கையை மையப்படுத்தி உருவான யூத் படம் நேற்று தியேட்டர்களில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்துக்கு கிடைத்து வருகின்றன. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். குறிப்பாக இளைஞர்களை கவரும் ஒரு படமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 436 திரைகளில் வெளியான யூத் படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.5.5 கோடி என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 5 கோடி தான் என்ற நிலையில் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே பட்ஜெட்டை கடந்து வசூல் சென்றுவிட்டது. சமீபத்தில் வெளியான சிறை தாய்கிழவி படங்கள் போல யூத் படமும் பெரிய அளவில் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்