- Advertisement -
Homeபொழுதுபோக்குநெகட்டிவ் விமர்சனங்களால் தொடரும் பாதிப்பு, திரைப்படங்களை விமர்சனம் செய்ய யூடியூப் சேனல்களுக்கு தடை - சினிமா...

நெகட்டிவ் விமர்சனங்களால் தொடரும் பாதிப்பு, திரைப்படங்களை விமர்சனம் செய்ய யூடியூப் சேனல்களுக்கு தடை – சினிமா தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு!

- Advertisement -

சமீப காலமாக சமூக வலைதளங்களின் ஆதிக்கம் என்பது வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும் யூடியூப் சேனல்களில் புதிய ரிலீஸ் திரைப்படங்கள் விமர்சனம் என்ற பெயரில் சிலர், வெளியாகும் படங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

அதனால் இந்த ஆண்டில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா உள்ளிட்ட சில படங்கள் இதுபோன்ற கடுமையான விமர்சனங்களில் சிக்கியதால் அந்த படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக குறைந்தது. இதனால் பலத்த நஷ்டத்தை அந்த படங்கள் சந்தித்தன.

- Advertisement -

முதல் நாள் முதல் காட்சி என்ற அடிப்படையில் படம் பார்த்துவிட்டு முதல் நாளிலேயே அவர்கள் யூடியூப் சேனல்களில் மற்றும் சமூக வலைதளங்களில் அந்த படங்கள் குறித்து மிகவும் கிண்டலாகவும் கேலியாகவும் கலாய்க்கும் தங்களது விமர்சனங்களை செய்கின்றனர். அதை பார்த்துவிடும் ரசிகர்கள் இந்த படம் குறித்து மோசமான அபிப்ராயங்களை உருவாக்கிக் கொண்டு அந்த படங்களை பார்ப்பதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர்.

அத்துடன் தியேட்டர்களில் சென்று பார்ப்பதை விரும்பாமல் ஓடிடி தளங்களில் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு மனப்போக்குக்கும் வந்து விடுகின்றனர். அதனால் இந்த 2024ம் ஆண்டில் வெளியான கங்குவா வேட்டையன் இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் பாதிப்படைந்து பலத்த நஷ்டத்தை சந்தித்தன. இதையடுத்து தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த 2024ம் ஆண்டில் இந்தியன் 2 வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு பப்ளிக் ரிவ்யூ மற்றும் டாக் மூலம் பெருமளவில் பாதிப்பை யூடியூப் சேனல்கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல் திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதன் முதல் முயற்சியாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும், ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் உள்ள எந்த யூடியூப் சேனல்களிலும் எடுக்க தடை செய்து இந்த FDFS Public review மற்றும் Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் பாரதிராஜா, செயல் தலைவர் தியாகராஜன், பொதுச்செயலாளர் சிவா ஆகியோர் கூட்டான அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்