- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் தயாரிப்பில் இறங்கும் யுவன் சங்கர் ராஜா... கதாநாயகனாக நடிக்கப் போவது யார் தெரியுமா...

மீண்டும் தயாரிப்பில் இறங்கும் யுவன் சங்கர் ராஜா… கதாநாயகனாக நடிக்கப் போவது யார் தெரியுமா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் யுவன் சங்கர் ராஜாவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இங்கு உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் ஏராளமானோர் யுவன் சங்கர் ராஜாவின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். 90ஸ் கிட்ஸ் களில் ஆதர்சன இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இருந்து வருகிறார்.

 

- Advertisement -

இசையமைப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவரது தயாரிப்பில் முதல் திரைப்படமாக பியார் பிரேமா காதல் உருவானது. ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக இதில் நடித்திருந்தார். தற்போது திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்டார் படத்தின் இயக்குனர் தான், பியார் பிரேமா காதலை எடுத்திருந்தார்.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாமனிதன் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை.

 

இந்த நிலையில் தற்போது மீண்டும் தயாரிப்பில் கவனம் செலுத்த யுவன் சங்கர் ராஜா முடிவு செய்திருக்கிறார். இவரின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில், ரியோ கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரியோ.

 

அங்கிருந்து வெள்ளி திரைக்கு முயன்றவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு எதையும் பிளான் பண்ணி பண்ணனும், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக அவர் நடித்திருந்தார். இதில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படம் ஓரளவு விமர்சனத்தை பெற்றது.

 

இதனை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இருப்பினும் திரை துறையில் அவருக்கு பெரிய வெற்றி வாய்ப்பு ஏதும் கிடைக்கவே இல்லை. இப்படியான சூழலில் யாரும் எதிர்பாராத நேரத்தில், ஜோ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டதுடன், ரியோவிற்கும் நல்ல ஒரு தொடக்கத்தை கொடுத்தது. தற்போது இரண்டு மூன்று படங்களில் பிசியாக நடித்து வரும் அவர், யுவன் சங்கர் ராஜா படத்திலும் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் எடுக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்