- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்துக்காக யுவன் சங்கர் ராஜா செய்து கொடுத்த சத்தியம், கடைசி வரை நிறைவேறாமல்...

தி கோட் படத்துக்காக யுவன் சங்கர் ராஜா செய்து கொடுத்த சத்தியம், கடைசி வரை நிறைவேறாமல் போன சோகம் – மறைந்த சகோதரி பவதாரணி மீண்டும் வருகிறாரா?

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( தி கோட்) இந்த படத்தில் விஜய், சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், கிச்சா சுதீப், ரம்யா கிருஷ்ணன், லைலா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்துக்கு, இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மூத்த மகன்தான் இயக்குனர் வெங்கட்பிரபு, அதனால் அவர் இயக்கும் படங்களில் தனது தம்பி யுவன் சங்கர் ராஜாவை தான் இசையைமக்க வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில், தி கோட் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, யுவன் சங்கர் ராஜாவின் மூத்த சகோதரிதான் பவதாரணி. இளையராஜாவின் முதல் மகள். அவருக்கு பிறகுதான் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா பிறந்தார்கள். ஒரு மகள், இரண்டு மகன்கள் என்ற நிலையில், பவதாரணி சில மாதங்களுக்கு முன், கல்லீரல் புற்றுநோயால் காலமானார்.

அவர் இறப்பதற்கு முன், அதாவது இலங்கையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், சென்னையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது, அந்த நேரத்தில், சகோதரி பவதாரணியை சந்திக்க சென்ற அவரது தம்பி யுவன் சங்கர் ராஜா, அக்கா, தி கோட் படத்தில் நீ பாட வேண்டிய பாடல் ஒன்று உள்ளது. உனக்காக அந்த பாடல் காத்திருக்கிறது. அதனால் சீக்கிரம் குணமாகி வா, என் இசையில் கோட் படத்துக்காக நீ பாட வேண்டிய வேலை இருக்கு, என்று தன்னம்பிக்கை தரும் விதமாக அவர் பவதாரணியிடம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் காலத்தின் கோலமாக, பவதாரணி மறைந்து விட்டார். அவரிடம் யுவன் சங்கர் ராஜா சொன்ன, தி கோட் படத்தில் அவர் பாட வேண்டும் என்று கூறிய விஷயம் நடக்காமல் போய்விட்டது. எனினும், தனது அக்காவிடம் சொன்ன தி கோட் படத்தில் நீ பாட வேண்டிய பாடல் இருக்கிறது என்கிற சத்தியத்தை நிறைவேற்றும் விதமாக, ஏஐ தொழில் நுட்பத்தில் பவதாரணி குரலில் தி கோட் படத்தில் ஒரு உருக்கமான பாடல் இடம்பெறுகிறது.

மறைந்த தனது சகோதரி பவதாரணிக்கு அர்ப்பணிக்கும் விதமாக, தனது இசையில் இந்த பாடலை ஏஐ தொழில்நுட்பத்தில் அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உருவாக்கி இருக்கிறார். மயில் போல பொண்ணு ஒண்ணு போல, இந்த பாடலும், பவதாரணியின் குரலில் தி கோட் படத்தில் ஒலிக்க இருக்கிறது. இந்த பாடல் மெலோடியாக, பவதாரணியின் பெக்கூலியர் குரலில் ரசிகர்களை உருக வைக்கும் என்பதில் ஐயமில்லை.

- Advertisement -

சற்று முன்