- Advertisement -
Homeபொழுதுபோக்குபசங்க படத்தில் விஜய் சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது... நான்தான் நிராகரித்து விட்டேன்... என்ன நடந்தது என்பதை...

பசங்க படத்தில் விஜய் சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது… நான்தான் நிராகரித்து விட்டேன்… என்ன நடந்தது என்பதை விவரமாகக் கூறிய இயக்குனர் பாண்டிராஜ்…

- Advertisement -

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பாண்டிராஜ். பசங்க திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்திய கதையை எழுதி அதை சுவாரசியமாக கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்று அசத்தியது.

இதன்பிறகு பாண்டியராஜின் திரையுலக பயணம் டாப் கியரில் சென்றது. நடுவே சில திரைப்படங்கள் அவருக்கு தோல்வி படமாகவும் அமைந்தன. இப்படியான சூழலில், கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கடை குட்டி சிங்கம் திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு வெற்றியை ருசித்து பாண்டிராஜ்க்கு ஒரு திருப்பு முனையை கொடுத்தது.

- Advertisement -

குடும்பங்கள் கொண்டாடும் கதையாகவும், அதில் உறவுகளின் சிக்கல்களை மிகத் தெளிவாகவும், அதற்கெல்லாம் தீர்வு உண்டு என்பதை செண்டிமெண்ட் கலந்தும் கொடுத்திருந்தார் பாண்டிராஜ். இதன் காரணமாக, கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்கு மக்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

பிறகு, சிவகார்த்திகேயனை வைத்து நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ், சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை கொடுத்தார். இப்படியான சூழலில் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் விஜய் சேதுபதியை வைத்து தலைவன் தலைவி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வரவேற்பு பெற்று வருகிறது.

- Advertisement -

இப்படியான சூழலில் பல்வேறு விஷயங்களை அவர் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதில் விஜய் சேதுபதிக்கும் எனக்கும் நீண்ட காலம் எதிர்மறையான விஷயங்கள் இருந்தன. சொல்லப்போனால் என்னை பற்றி அவரிடம் சிலர் தவறாக கூறி இருக்கிறார்கள். அதேபோலத்தான் அவரைப் பற்றி என்னிடமும் சிலர் வேறு விதமாக பேசினார்கள். என்னுடைய முதல் திரைப்படமான பசங்கவில் ஒளிப்பதிவாளராக 96 பிரேம்குமார் தான் பணியாற்றினார்.

அப்போது மீனாட்சி சுந்தரம் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியை வைக்கலாம் என்று கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன். அதன் பிறகு, விஜய் சேதுபதிதான் விமலை அனுப்பி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட விஜய் சேதுபதி, ஒருவருடன் நீண்ட காலம் நான் பேசாமல் இருந்தேன். ஆனால் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்த பிறகுதான் தெரிகிறது அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்று தெரிவித்திருப்பார். அவர் என்னைதான் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதை எனக்கு போன் செய்து விஜய் சேதுபதி கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்