தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டவர் நடிகர் மாதவன். நல்ல கதையம்சம் நிறைந்த பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் மாதவன், சமீப காலமாக விளம்பர படங்களில் தான் அதிகமாக நடிக்கிறார். சினிமாவில் அதிகமாக நடிப்பதில்லை என்ற ஒரு மனக்குறை ரசிகர்களுக்கு இருந்தது.
ஆனால் இப்போது நடிகர் மாதவன் அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அதிர்ஷ்டசாலி படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் அதிர்ஷ்டசாலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்தது. பேண்டசி டிராமா கதையசம்சம் கொண்டு உருவாக்கும் அதிர்ஷ்டசாலி படத்தை ஏ.ஏ மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ஷர்மிளா, ரேகா விக்கி மற்றும் மனோஜ் முல்கி ஆகியோர் மிகப் பிரமாண்டமாக தயாரித்து உள்ளனர்.
அதிர்ஷ்டசாலி படத்தின் ஷூட்டிங் ஸ்காட்லாண்டில் உள்ள புகழ்பெற்ற பகுதிகளில் நடந்துள்ளது. போர்த் பிரிட்ஜ், எடின்பர்க், டீன் வில்லேஜ் மற்றும் விக்டோரியா ஸ்ட்ரீட் என புகழ்பெற்ற ஆரியபட்டர் படங்கள் படமாக்கப்பட்ட லொக்கேஷன்களில் அதிர்ஷ்டசாலி படத்தின் சூட்டிங் நடைபெற்றுள்ளது.
இந்த படத்தில், முன்னணி நடிகர் நடிகைகளின் அசத்தலான நடிப்பு சிறப்பான தொழில்நுட்ப முறைகள் பிரமாண்ட காட்சிகளால் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத தலைசிறந்த அனுபவத்தை இந்த படம் கொடுக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் மடானா செபாஸ்டியன், ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, ஜெகன் உதய் மகேஷ், ரவி பிரகாஷ் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் இந்த படத்தை வெளியிடும் தேதியை படக்குழுவினர் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் மாதவனுக்கு அதிர்ஷ்டசாலி படம் மிகப்பெரிய திருப்புமுனை வெற்றிப் படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.





