- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்கலான் டீசர் எப்போ தெரியுமா... சியான் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு போங்க...

தங்கலான் டீசர் எப்போ தெரியுமா… சியான் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு போங்க…

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்தவர் பா ரஞ்சித். சென்னை 600028 திரைப்பட முதல் பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்த அவர், அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். தனது முதல் திரைப்படத்திலேயே பலரது பார்வையும் பா ரஞ்சித் மீது பட, தமிழ் சினிமாவில் அவரது இயக்கத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதனை அப்படியே காப்பாற்றும் வகையில், மெட்ராஸ் படத்தை எடுத்து கைத்தட்டல்களை பெற்றார் பா ரஞ்சித். தமிழ் சினிமாவில் அதற்கு முன்பு தலித் மக்களைப் பற்றி பல்வேறு படங்கள் பேசி இருந்தாலும், அங்கு நிலவும் அரசியல் குறித்து பா ரஞ்சித்தின் பார்வை மிக புதுமையாக அமைந்தது.

- Advertisement -

இதனால் அவரது இயக்கத்திற்கு என தனி ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. இதன் பிறகு சூர்யாவை வைத்து இயக்க அவர் திட்டமிட்ட போது, ரஜினியை இயக்கும் வாய்ப்பு திடீரென அவருக்கு கிடைக்க அடுத்தடுத்து கபாலி கால ஆகிய இரண்டு திரைப்படங்களை எடுத்தார்.

இதன் பிறகு இயக்கத்திற்கு சிறிது இடைவெளி விட்ட, ஆர்யாவை வைத்து சர்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் சீயான் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தை எடுத்து வருகிறார்.

- Advertisement -

கோலார் தங்க வயலில் சுதந்திரத்திற்கு முன்பு நடைபெற்ற கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் விக்ரமுடன் பார்வதி மேனன் பசுபதி உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இதிலிருந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். தங்கலான் திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தங்கலான் டீசரை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. விரைவில் டீசர் வெளியாகும் என்று ஜிவி பிரகாஷ் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அனேகமாக அடுத்த வாரம் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்