- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவ்வளவு மிஸ்டு கால்கள் வந்தன.. ஜெயிலர் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டது இப்படித்தான்.. விநாயகன் ஓபன் டாக்

அவ்வளவு மிஸ்டு கால்கள் வந்தன.. ஜெயிலர் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டது இப்படித்தான்.. விநாயகன் ஓபன் டாக்

- Advertisement -

ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்துவந்தார். எப்போதும் ஒரு தோல்வி படம் கொடுத்தால் அடுத்ததாக ஒரு மெகா ஹிட்டைகொடுத்துவிடுவது ரஜினியின் பழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக தடுமாறிக்கொண்டிருந்தார். சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமாருடன் கை கோர்த்தார் அவர்.

நெல்சன் சிறந்த இயக்குநர்தான் என்றாலும் பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டால் கொஞ்சம் பயத்தோடுதான் இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் அவர்களது பயத்தை தனது திறமையால் போக்கிவிட்டார். கடந்த மாதம் வெளியான படத்தை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் ரசிகர்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு மெகா ரெஸ்பான்ஸ். இதுவரை 650 கோடி ரூபாய்வரை உலகளவில் படம் வசூலித்திருக்கிறதாம்.

- Advertisement -

இதனால் உற்சாகமடைந்த கலாநிதி மாறன் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ, போர்ஷே கார்களை பரிசாக வழங்கினார். காரோடு சேர்த்து செக்கையும் பரிசாக வழங்கினார். எனவே அடுத்த ஒரு படத்திலும் சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு ஜெயிலர் நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறதாம்.

இதற்கிடையே படத்தில் இன்னொரு ஹைலைட்டாக இருந்தது படத்தின் வில்லன். போன படத்தில் வில்லன் கேரக்டரால்தான் அவர் ரொம்பவே ட்ரோல் செய்யப்பட்டார். எனவே இந்த முறை ஃபவர்புல்லான வில்லனை இறக்கியிருந்தார் அவர். அப்படி விநாயகன் வர்மன் கேரக்டரை ஏற்றிருந்ததார். விநாயகன் மிகச்சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்தது. அதனை இந்தப் படத்திலும் நிரூபித்திருந்தார். வர்மன் கேரக்டருக்கு ஏகப்பட்ட க்ளாப்ஸுகள் கிடைத்தன.

- Advertisement -

இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்து விநாயகன் பேசியதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அவர், “நாம் ஒரு ஷூட்டிங்கிற்காக சிக்னல் கிடைக்காத இடத்தில் காட்டுக்குள் 15 நாட்கள் இருந்தேன். அதை முடித்து வந்த பிறகு எனக்கு ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் வந்தன. பிறகு யார் என்று கேட்கும்போது ரஜினி சாருக்கு விலல்னாக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

நான் வேறு எதையுமே கேட்கவில்லை. உடனடியாக ஒத்துகொண்டேன். முழு கதையையும் நெல்சன் என்னிடம் சொல்லிவிட்டார். ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய நடிகர். அவர் என்னை அரவணைத்து எனக்கு அவ்வளவு எனர்ஜியை கொடுத்தார். ஒரே பாபா அவர்தான். படத்தின் கதையில் என்னுடைய கேரக்டரை மட்டும்தான் நெல்சன் சொன்னார். நானும் வேறு எதுவும் கேட்கவில்லை.இந்த கேரக்டர் அவ்வளவு ஹிட்டாகிவிட்டது. கனவில் கண்டது போல் இருக்கிறது. இதற்காக நெல்சன், ரஜினி சார், கலாநிதி மாறனுக்கு நன்றி” என்றார்.

- Advertisement -

சற்று முன்