நடிகர் சூர்யா ஆரம்பத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். குறிப்பாக காக்க காக்க நந்தா கஜினி ஏழாம் அறிவு பிதாமகன் சிங்கம் வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக நந்தா, சூர்யா வாழ்வில் திருப்புமுனை படமாக இருந்தது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சூர்யா நடித்த 10 திரைப்படங்களும் படுதோல்வி படங்களாக இருந்தன. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம், சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே அவருக்கு வணிக ரீதியான வெற்றிப் படங்களாக அமைந்தது. சமீபத்தில் வெளியான கங்குவா படமும் படுதோல்வியை சந்தித்தது.
நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன படம்தான் வணங்கான். ஆனால், படம் ஆரம்பித்த சில வாரங்களில் படத்தின் கதை குறித்து சூர்யா கேட்டதால், அதனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த படத்தை விட்டு விலகினார் நடிகர் சூர்யா. பிறகு அந்த கேரக்டரில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.
இயக்குனர் பாலா, சேது படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்தார். 1994ம் ஆண்டில் சேது படம் வெளியானது. இப்போது 25 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்துள்ள இயக்குனர் பாலாவுக்கு பாராட்டு விழா நடத்த வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். அதன்படி அந்த பாராட்டு விழாவும், வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் நடந்தது.
வணங்கான் படத்தில் இருந்து விலகியதால் சூர்யா இந்த விழாவில் பங்கேற்பாரா என பலரும் சந்தேகித்த நிலையில் தன் தந்தை சிவக்குமாருடன் பங்கேற்ற நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து தன் அன்பை வௌிப்படுத்தினார். பாலா இயக்கிய படங்களில் நடித்த விக்ரம், ஆர்யா, விஷால் உள்ளிட்டோர் இந்த விழாவுக்கு வராதது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் வணங்கான் படம் டிரெயிலர் காட்டப்பட்டது. அப்போது டிரெயிலரை பார்த்த நடிகர் சூர்யாவின் முகத்தில் பல்வேறு ரியாக்ஷன் தெரிந்தது. நிச்சயமாக இது வேற லெவல் படம்தான். இந்த படத்தில் நடித்திருந்தால் 10 ஆண்டுகள் தொடர் தோல்விக்கு பிறகான மிகப்பெரிய வெற்றியாக இருந்திருக்கும். நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டோமே என்று அவர் அப்செட் ஆனதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.





