- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் செலவு; மலையாள நடிகர் பிருத்விராஜ் இந்த போடு போடுகிறாரே?...

ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் செலவு; மலையாள நடிகர் பிருத்விராஜ் இந்த போடு போடுகிறாரே? – அசந்து போய் திணறும் கோலிவுட் வாட்டாரம்

- Advertisement -

இப்போது சின்ன பட்ஜெட் படங்கள் என்பதே தமிழ் சினிமாவில் கேள்விக்குறியாகி வருகிறது இதனால் சின்ன பட்ஜெட் படங்களின் நடிக்கும் மூன்றாம் நிலை, நான்காம் நிலை நடிகர்கள், துணை நடிகர்கள் நடிக்கும் வாய்ப்பு இழந்துள்ளனர. தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை இழந்துள்ளனர். சின்ன பட்ஜெட் படங்கள் இல்லாததால், ஆயிரக்கணக்கான சினிமா துறை சார்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

பான் இந்தியா படங்களாக, பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே அதிகமாக இப்போது உருவாகின்ற. பான் இந்தியா படங்களான அதில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், பெரிய இயக்குனர்களுக்கு மட்டுமே பட வாய்ப்புகள் என்பது தொடர்ந்து இருக்கிறது. ஆனால் சின்ன பட்ஜெட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பலத்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆடு ஜீவிதம் படத்தில் நடித்த நடிகர் பிருத்விராஜ், லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை எம்புரான் என்ற பெயரில் டைரக்ட் செய்து வருகிறார். லைகா புரக்டசன்ஸ் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. எம்புரான் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக்கி வருகின்றனர்.

இந்த படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், சாய் குமார், டொமினோ தாமஸ், பைஜூ சந்தோஷ், சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. ஆடுஜீவிதம் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிருத்விராஜ், இப்போது எம்புரான் படப்பிடிப்பில் மும்முரமாக படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

வழக்கமாக வெளிநாடுகள், அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் கதைகளமாக இருந்தால் நடிகர், நடிகையர், டைரக்டர் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அங்கு சென்று, குறிப்பிட்ட நாட்கள் அந்த நாட்டிலேயே தங்கி படப்பிடிப்பை நடத்துவதுதான் இதுவரை வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் எம்புரான் படத்துக்காக, ஈரான் நாடு போன்ற ஷெட்டையே, சென்னையில் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் பிருத்விராஜ்.

இதற்காக தினமும் ஒரு கோடி ரூபாய் வரை செலவழிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு கோடி, மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு முழு படமே எடுக்கப்படும் நிலையில், ஒருநாள் படப்பிடிப்புக்காக, தினமும் ஒரு கோடி ரூபாய் செலவழிப்பது என்பது சினிமா வட்டாரத்தில் ஒரு பெரிய பரபரப்பை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் நடித்த படம் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த போது தினமும் 50 லட்சம் ரூபாய் தான் செலவானது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்