- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் இதுவரை 200 கோடி ரூபாய் வசூலித்த படங்கள் என்னென்ன? அட இதிலும் அவர்தான்...

தமிழ் சினிமாவில் இதுவரை 200 கோடி ரூபாய் வசூலித்த படங்கள் என்னென்ன? அட இதிலும் அவர்தான் முதலிடமா? இரண்டாமிடம் யாருக்கு தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்கள் வந்திருக்கின்றன. இதில் சில படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. சொற்பமான படங்கள் சுமாரான வெற்றியை பெற்றிருக்கின்றன. சில படங்கள் பெரிய லாபமும் இல்லை, பெரிய நஷ்டமும் இல்லாத படங்களாக இருந்திருக்கின்றன. சில படங்கள் மிக மோசமான தோல்வி படங்களாக இருந்திருக்கின்றன.

அந்த வகையில் எப்போதுமே வெற்றிப் படங்களை கொடுக்கும் நடிகர்கள் என்றால் அது 4 பேர் மட்டும்தான். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜீத்குமார் ஆகிய 4 பேரும்தான் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிகளை தரும் நட்சத்திர நடிகர்களாக பவனி வருகின்றனர். அதில் ஒருவர் விஜய், தனது 69வது படத்துடன் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக அறிவித்து விட்டார்.

- Advertisement -

நடிகர்கள் தனுஷ், சூர்யா, சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிலம்பரசன், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் அவர்களால் ரூ. 100 கோடி வசூலை கடக்கும் படங்களை தருவதே பெரும்பாடாக உள்ளது. தனுஷ் ராயன் படத்தில் ரூ. 155 கோடி வசூலை எட்டினா். விஜய் சேதுபதியும் மகாராஜா படத்தில் 100 கோடி வசூலை கடந்ததாக கூறப்பட்டது.

ஆனால் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் ரூ. 200 கோடி வசூலை கடந்த படங்களில் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன், கபாலி, பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன் ஆகிய 6 படங்கள் ரூ. 200 கோடி கடந்துள்ளன. கமல் நடித்த விக்ரம் படம் ரூ. 200 கோடியை கடந்த வெற்றிப் படமாக உள்ளது.

- Advertisement -

அஜீத்குமார் நடிப்பில் வெளியான துணிவு ரூ. 200 கோடி வசூலித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ, தி கோட் ஆகிய 8 படங்கள் ரூ. 200 கோடி வசூலை கடந்துள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் 1, 2 பாகங்கள் ரூ. 200 கோடி வசூலை தாண்டியுள்ளன. தற்போது சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் வசூல் ரூ. 200 கோடியை கடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 200 கோடி வசூலை கடந்த நடிகர்களாக விஜய் முதலிடத்தில் ( 8 படங்கள்) இருக்கிறார். ரஜினிகாந்த் இரண்டாமிடத்தில் ( 6 படங்கள்) இருக்கிறார். கமல், அஜீத்குமார், சிவகார்த்திகேயன் தலா 1 படங்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கின்றனர். தமிழ் சினிமாவை பொருத்த வரை வசூல் மன்னர்களாக இருப்பது விஜயும், ரஜினியும்தான் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகிறது.

- Advertisement -

சற்று முன்