- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்துள்ள தி கோட் படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்குதா? இன்னும் என்னென்ன டிவிஸ்ட்...

விஜய் நடித்துள்ள தி கோட் படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்குதா? இன்னும் என்னென்ன டிவிஸ்ட் எல்லாம் இயக்குனர் வெங்கட்பிரபு வைச்சிருக்காருன்னே தெரியலையே…?

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளை, சஸ்பென்ஸ்களை இயக்குனர் வெங்கட்பிரபு வைத்திருக்கிறார். இதுவரை பல விஷயங்கள் அப்டேட் ஆகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நிலையில், இன்னும் இன்னும் புதிய தகவல்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அது ரசிகர்களை இன்னும் ஆச்சரியப்படுத்துகின்றன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதே போல், 1980களில் முன்னணி நாயகனாகவும், வெள்ளிவிழா நடிகராகவும் இருந்த மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் தகவல்களாக இருக்கின்றன.

- Advertisement -

குறிப்பாக தி கோட் படத்தில் இரண்டு விஜய் அப்பா, மகன் என நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் 3வது ரோலிலும் விஜய் நடித்துள்ள தகவல் வெளியானது. இந்த படத்தில் மறைந்த நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சின்ன கலைவாணர் விவேக் ஏஐ தொழில்நுட்பத்தில் நடித்திருந்த நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருப்பது தெரிய வந்தது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஒரு பாடலை, மறைந்த பின்னணி பாடகி பவதாரணி பாடுவதாக இருந்தது. அவரது சகோதரர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில், பவதாரணி பாட வேண்டிய பாடலை, அவர் மறைந்துவிட்டதால் ஏஐ தொழில்நுட்பத்தில் சின்ன சின்ன கண்ணில் என்ற பாடலை, பவதாரணி குரலில் பாட செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த விஷயங்களுக்கு மத்தியில் தி கோட் படத்தில், டி20 கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் சிலரும் சில காட்சிகளில் வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஒரு குத்தாட்ட பாடலில், நடிகர் விஜயுடன் சேர்ந்து நடிகை திரிஷா குத்தாட்டம் ேபாட்டிருக்கிறார். இதுவரை திரிஷா எந்த படத்திலும் இப்படி அயிட்டம் பாடலுக்கு ஆடாத நிலையில், விஜயுடன் இந்த படத்தில் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி, தி கோட் படத்தின் விசில் போடு பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியானது. அதன்பிறகு விஜய் பிறந்த நாளன்று ஜூன் 22ம் தேதி, சின்ன சின்ன கண்ணில் என்ற பாடல் செகன்ட் சிங்கிளாக வெளிவந்தது. இப்போது ஆகஸ்ட் முதல் வாரத்தில், தி கோட் படத்தின் 3வது சிங்கிள் வெளியாகிறது. இந்த பாடலை பாடியிருப்பது நடிகர் கமல்ஹாசனின் மகள், பிரபல நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து தி கோட் படத்தில் டிவிஸ்ட்டுகள் அப்டேட் ஆகிக்கொண்டே இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

- Advertisement -

சற்று முன்