- Advertisement -
Homeபொழுதுபோக்குமாநாடு படத்தில் தலைவரே தலைவரே டயலாக் பேசி போலீஸ் கேரக்டரில் அசத்திய எஸ் ஜே சூர்யா...

மாநாடு படத்தில் தலைவரே தலைவரே டயலாக் பேசி போலீஸ் கேரக்டரில் அசத்திய எஸ் ஜே சூர்யா – அந்த கேரக்டரில் நடிக்க மறுத்த 4 பிரபல நடிகர்கள் யாரென்று தெரியுமா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் மிக முக்கியமானது வாலி. அண்ணன் தம்பி கேரக்டரில் அஜீத்குமார் அசத்தலான நடிப்பை தந்திருப்பார். அதிலும் மாற்றுத்திறனாளி கேரக்டரில், தம்பி மனைவி சிம்ரன் மீது ஆசைப்படும் சைக்கோ கேரக்டரில் அஜீத் வேற லெவலில் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தை இயக்கியவர் எஸ்ஜே சூர்யா தான்.

அடுத்து நடிகர் விஜய்க்கு, அவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது, குஷி படம். ஜோதிகாவுக்கும் அவரது திரை பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக குஷி இருந்தது. அதே போல் விவேக் மற்றும் மும்தாஜூக்கும் இந்த படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தையும் இயக்கியவர் எஸ்ஜே சூர்யாதான். இப்படி அஜீத்குமார், விஜய்க்கு நல்ல ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தி தந்தவர் எஸ்ஜே சூர்யா.

இயக்குனராக இருந்த அவர் திடீரென நடிகராகி மாறி அன்பே ஆருயிரே, நியூ, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். இப்படி மளமள என வளர்ந்து வந்த எஸ்ஜே சூர்யா, திடீரென சினிமாவை விட்டே காணாமல் போனார். ஏறக்குறைய எஸ்ஜே சூர்யாவையே ரசிகர்கள் மறந்து போய்விட்டனர்.

அதன்பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார் எஸ்ஜே சூர்யா. அடுத்து இசை படத்தில் நடித்தவர், ஸ்பைடர், மான்ஸ்டர், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி, இப்போது வேற லெவல் நடிகராகி மாறி விட்டார் எஸ்ஜே சூர்யா.

அதிலும் மாநாடு படத்தில், போலீஸ் உயரதிகாரியாக ஒய்ஜி மகேந்திராவிடம் தலைவரே, தலைவரே, இல்ல தலைவரே ரொம்ப தப்பு தலைவரே, என்னடா பிளானு, நீங்க சி எம் ஆகறதுதான் பிளானு என்ற வசனங்களை பேசி நடித்து மாஸ் காட்டியிருந்தார் எஸ்ஜே சூர்யா. அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது எஸ்ஜே சூர்யாவின் இந்த தரமான நடிப்புதான் என்பதை யாருமே மறுக்க முடியாது.

இந்த நிலையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு நேர்காணலில் பேசுகையில், எஸ்ஜே சூர்யா நடித்த அந்த கேரக்டரில் நடிக்க பசுபதியிடம் முதலில் கேட்கப்பட்டது. அவர் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. பிறகு கிச்சா சுதீப், ரவிதேஜா ஆகியோரிடம் பேசப்பட்டது. அவர்களுக்கு நடிக்க விருப்பமிருந்தும், கால்ஷீட் பிரச்னை இருந்தது. நடிகர் அரவிந்த் சாமியிடமும் பேசப்பட்டு அவரும் நடிக்க முடியாததால் கடைசியில்தான் அந்த வாய்ப்பு எஸ்ஜே சூர்யாவுக்கு கிடைத்தது, என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்