- Advertisement -
Homeபொழுதுபோக்குசேது படம் வெளியான போது நடந்த அந்த சம்பவம், வயதான அந்த அம்மா குறித்து பேசிய...

சேது படம் வெளியான போது நடந்த அந்த சம்பவம், வயதான அந்த அம்மா குறித்து பேசிய இயக்குனர் பாலா – மனுஷன் இப்படி இருக்கிறாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய படைப்பாளிகளில் மிகவும் கவனிக்கப்படுபவர் இயக்குனர் பாலா. சேது என்ற படம் மூலம் 25 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அவர், இதுவரை தந்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக ரசிகர்கள் மத்தியில் தனித்துவம் பெற்ற படங்களாக இருந்திருக்கின்றன.

குறிப்பாக பரதேசி பிதாமகன் அவன் இவன் தாரை தப்பட்டை நான் கடவுள் என பல படங்களை தன்னுடைய இயக்கம் மூலம் வேற லெவலில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பார்வையை கொண்டு சென்றவர் இயக்குனர் பாலா. அவரது இயக்கத்தில் அடுத்ததாக அருண் விஜய் நடித்த வணங்கான் படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் சென்னையில் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இயக்குனர் பாலாவுக்கு சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவு பாராட்டு விழாவும் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார் இயக்குனர் பாலாவிடம் சில கேள்விகள் கேட்டார்.

அப்போது சேது படம் வெளியான போது நடந்த மறக்க முடியாத சம்பவம் ஏதாவது இருக்கிறதா, அப்போது குறிப்பிட்டு சொல்லும்படியான விஷயம் ஏதும் நடந்ததா என்று அவரிடம் நடிகர் சிவக்குமார் கேள்வி கேட்டார். அதற்கு இயக்குனர் பாலா, அந்த சம்பவம் குறித்து கூறினார்.

- Advertisement -

செல்போன் இல்லாத டைம் அது. என் வீட்டுக்கு ஒரு போன்கால் வந்தது. அதில் பேசிய வயதான ஒரு அம்மா, அவருக்கு குழந்தைகள் வாரிசு என்று யாரும் இல்லை. ஆனால் கொஞ்சம் சொத்து பத்துகள் இருக்கிறது. அவர் என்னிடம், உன்னுடைய படம் பார்த்தேன். உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதனால் என்னுடைய நிலத்தை உனக்கு இலவசமாக எழுதி வைக்கிறேன் என்றார். அதெல்லாம் வேண்டாம் அம்மா, ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு அந்த நிலத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறினேன். அது என்னால் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்று இயக்குனர் பாலா கூறியிருக்கிறார். நிலத்தையே பாலாவுக்கு ஒரு வயதான பெண் எழுதி வைக்க முன்வந்த இந்த சம்பவம் திரையுலகம் சார்ந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

- Advertisement -

சற்று முன்