- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் திரைக்கு வராததால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாரான 4 படங்கள்… அட அந்த படமும்...

ஜனநாயகன் திரைக்கு வராததால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாரான 4 படங்கள்… அட அந்த படமும் வருகிறதா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸாகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் இந்த படம் முடக்கப்பட்டுள்ளது. இது தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. எனினும் பராசக்தி படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஜனநாயகன் படம் வெளிவராததால் பராசக்தி படத்துக்கு முன்பு திட்டமிட்டதை விட நிறைய தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் இப்போது பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் வருகிற 14ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

- Advertisement -

நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி சத்யராஜ் ராஜ்கிரண் நடித்த இந்த படத்தை நலன் குமாரசாமி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். கடன் பிரச்னையால் கோர்ட் வழக்கை சந்தித்த இந்த படம் வருகிற 14ம் தேதி ரிலீஸ் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் உருவான படம் இப்போது பொங்கலுக்கு வருகிறது. இது மதகஜ ராஜா போல ஒரு சூப்பர் ஹிட் படமாகவும் அமைய வாய்ப்புள்ளது. ஆனந்த் பால்கி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வைபவி சாண்டில்யா நாயகியாக நடித்துள்ளார். இந்த படமும் வருகிற பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் என்கிற படமும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் வருகிற 30ம் தேதி ரிலீஸ் என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது 2 வாரங்கள் முன்னதாக வரும் 15ம் தேதியே இந்த படம் ரிலீஸ் ஆகிறது. ஜீவாவுக்கு இந்த படம் கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் உருவான திரவுபதி 2 படம் வருகிற 15ம் தேதி வெளியாக உள்ளது. ரிச்சர்ட் ரிஷி ஷீலா ராஜ்குமார் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் திரவுபதி படத்தின் 2ம் பாகமாக வெளியாக உள்ளது. விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளிவராத நிலையில் இந்த 4 படங்களும் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் இந்த படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்