- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி எப்போதுமே கார் பின்சீட்டில் அமர்ந்து பயணிக்க இதுதான் காரணமா? தலைவருக்கே கண்டிஷன் போட்ட லதா...

ரஜினி எப்போதுமே கார் பின்சீட்டில் அமர்ந்து பயணிக்க இதுதான் காரணமா? தலைவருக்கே கண்டிஷன் போட்ட லதா ரஜினிகாந்த் – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

பொதுவாக வீட்டுல எலி வெளியில புலி என்று குடும்ப வாழ்க்கையை பற்றி பேசும்போது, ஆண்களை பற்றி குறிப்பிடுவார்கள். எவ்வளவு பெரிய அரசு அதிகாரியாக இருந்தாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் நடிகராக இருந்தாலும் நாடே கொண்டாடும் ஒரு பிரபலமாக இருந்தாலும் அவர்கள் வீட்டை பொருத்த வரை சாதாரண மனிதராக தான் மதிக்கப்படுவார்கள், நடத்தப்படுவார்கள். இது வாழ்வின் யதார்த்தம்தான்.

இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் பொருந்தும். அந்த வகையில் நடிகர் ரஜினியை பொருத்த வரை அவர் செய்ய வேண்டி படங்கள் பல முக்கிய முடிவுகளை எடுப்பது, நிதி விவகாரம், குடும்ப விஷயங்கள் என அனைத்துமே நிர்வகிப்பது அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தான். ஒட்டுமொத்தமாக அவரது கையில்தான் எல்லாமே இருக்கிறது. போயஸ் கார்டன் வீட்டுக்கு வரும் சினிமா விருந்தினர்களிடம் இத்தனை நிமிடங்கள்தான் ரஜினிகாந்த் பேச வேண்டும் என்றும் ஒரு ரூல்ஸ் லதா ரஜினிகாந்த் போட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் காரை ஓட்டும் டிரைவருக்கு, லதா ரஜினிகாந்த் கண்டிசன் போட்டிருக்கிறார். அதாவது ரஜினிக்கு கார் ஓட்டும்போது அவரை இறக்கிவிட வேண்டிய இடத்தில் இறக்கி விட வேண்டும். மற்றபடி காரில் பயணிக்கும் போது அவருடன் எதுவும் பேசக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் தனது கணவர் ரஜினியிடம், நீங்கள் காரில் போகும் போது டிரைவரிடம் பேசக்கூடாது என்றும் ரூல்ஸ் போட்டிருக்கிறார். இதற்கிடையே கார் டிரைவரின் குழந்தைக்கு உடல் நலமின்றி மருத்துவ சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. அதுகுறித்து காரில் செல்லும் போது அந்த டிரைவர், ரஜினியிடம் விஷயத்தை கூறியிருக்கிறார். உடனே ரஜினிகாந்த், தனது சட்டை பையில் இருந்த ரூ. 7 ஆயிரத்தை எடுத்து தந்து, இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த விஷயம் லதா ரஜினிகாந்துக்கு எப்படியோ தெரிய வந்திருக்கிறது. பயங்கரமாக கோபப்பட்ட அவர், காரில் போகும் போது சாரிடம் பேசக்கூடாது என்று நான் சொல்லியும், மீறி பேசியிருக்கிறாய். சாரிடம் பணமும் வாங்கி இருக்கிறாய். இனிமேல் வேலைக்கு நீ வரவேண்டாம் என்று கூறியிருக்கிறார். அப்போது டிரைவர், மேடடம், எனக்கு சார் தந்த 7 ஆயிரம் ரூபாயை கூட திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் வேலையை விட்டு மட்டும் அனுப்பி விடாதீர்கள் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனால் லதா ரஜினிகாந்த் மனம் இறங்கவில்லை.

இப்படி ஒரு தகவல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சினிமா பத்திரிகையாளர் பாலாஜி பிரபு என்பவரும் கூறியிருக்கிறார். சமீபத்தில் மத்திய அரசின் பாரத் சேவா அமைப்பின் மூலம் ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்யப் போவதாக லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். தன் வீட்டு கார் டிரைவர் குழந்தைக்கே மருத்துவ சிகிச்சைக்கு உதவி மனம் இல்லாமல், டிரைவரை வீட்டுக்கு அனுப்பியவர், அவரா குழந்தைகளுக்கு உதவ போகிறார்? அவரது உண்மை முகம் இதுதான் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்