நடிகர் விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை கேரக்டர்களில் நடித்துள்ளார். இதில் அப்பாவாக காந்தி என்ற ரோலிலும், மகனாக 23வது இளைஞனாகவும் விஜய் நடித்திருக்கிறார். மீனாட்சி சௌத்ரி, சினேகா என இருவரும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
தி கோட் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை விசில் போடு, சின்ன சின்ன கண்கள், நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு என 3 சிங்கிள்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இவை மூன்றுமே பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆகவில்லை. யுவன் சங்கர் ராஜா பெயர் சொல்லும் பாடல்களாக அவை இல்லாதது படக்குழுவினருக்கும் ஏமாற்றத்தை தந்தது.
இந்நிலையில் 4வது சிங்கிள் பாடலாக இன்று மாலை 6 மணிக்கு விஜய், திரிஷா குத்தாட்டம் போட்ட அயிட்டம் சாங் வெளியாகிறது. முதன்முறையாக நடிகை திரிஷா, அவர் நடிக்காத ஒரு படத்தில் அயிட்டம் பாடலுக்கு ஆடுவது இதுவே முதல் முறை. அதுவும் தனது நீண்ட கால நெருங்கிய நண்பர் விஜய்க்காக இந்த குத்தாட்ட பாடலுக்கு திரிஷா ஓகே சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 6 மணிக்கு தி கோட் படத்தில் இருந்து மட்ட என்ற பாடல் வெளியாகிறது. இந்த பாடல் குறித்து படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா தனது எக்ஸ் பதிவில், பல்வேறு காரணங்களுக்காக இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் இந்த பாடல் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் இன்று மாலை வெளியாகும் மட்ட பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக், இது இளைய தளபதியின் பிளாஸ்ட். ஆட்ட நாயகன் நடனத்திற்காக காத்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் இந்த பாடலில் ஒரு பெரிய டிவிஸ்ட்டை இன்று வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு.
அதாவது, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் மட்ட பாடலில் விஜய் மற்றும் திரிஷா குத்தாட்டம் போட்டுள்ளனர். ஆனால் இந்த பாடல் காட்சியில் திரிஷா வரமாட்டார். அவர் இல்லாத காட்சிகளாக மட்டுமே இந்த பாடல் இன்று மாலை வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. திரிஷா மற்றும் விஜயின் ஒரிஜினல் குத்தாட்டத்தை தியேட்டரில் படத்தில்தான் ரசிகர்கள் ரசிக்க வேண்டும். அப்போதுதான் அது பெரிய வைப்பை ஏற்படுத்தும் என இந்த ஏற்பாட்டை டைரக்டர் வெங்கட்பிரபு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.





