விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி துவங்கி 2 நாட்களாகிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பிரவீன் காந்தி ஒருவரை தவிர மற்ற அனைவருமே டிவி சேனல்களிலும் யூடியூப் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களின் மூலமும் பிரபலமானவர்களாக இருக்கின்றனர். விஜே பார்வதி வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் அகோரி கலையரசன் எஃப்ஜே பிரவீன் ராஜ் உள்பட 20 போட்டியாளர்கள் இந்த வீட்டுக்குள் இருந்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக வந்தவர் வாட்டர்மெலன் ஸ்டார் நடிப்பு அரக்கன் என தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் திவாகர்தான். சமீபத்தில்தான் அவர் இணையத்தில் பெரிய அளவில் ஒரு பேசுபொருளாக மாறி வைரல் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திடீரென தங்கப்பத்தகம் சிவாஜிகணேசன் போலவும் அந்நியன் சியான் விக்ரம் போலவும் இவர் நடித்து அருகில் இருப்பவர்களை பீதி ஏற்படுத்துவார்.
அதே நேரத்தில் நடிப்பு என்ற பெயரில் இவர் செய்யும் சேட்டைகளையும் சிலர் ரசிக்கவே செய்கின்றனர். சில சேனல்களில் திவாகரை நேர்காணலுக்கு வரவழைத்து அவரை கலாய்த்து அவரை கேமரா முன்பு நடிக்க வைத்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தனர். ஆனால் அதை எல்லாம் உண்மை என்று நம்பி, தனது நடிப்புத் திறமைக்கு கிடைத்த மரியாதை என அவர் நடிப்பில் எழுச்சி காட்டிய வீடியோக்கள் இணையத்தில் இன்றும் காமெடி வீடியோக்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இப்போது வரை கமல் போல சிவாஜி கணேசன் போல சியான் விக்ரம் போல நான் ஒரு சிறந்த நடிகன் என்ற மனநிலையில்தான் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இருந்து வருகிறார் என்பதுதான் கசப்பான உண்மை. அந்த வேலையை இப்போது அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் காட்ட ஆரம்பித்து விட்டார். அதனால் அவரை சமாளிப்பதுதான் இப்போது சக போட்டியாளர்களுக்கு பெரிய டாஸ்க் ஆக மாறியுள்ளது.
இதற்கிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் நாளில் நடந்த நாமினேஷன் நிகழ்ச்சியில் கலையரசன் வாட்டர்மெலன் திவாகர் பிரவீன்காந்தி ஆதிரை வியானா பிரவீன் ராஜ் ஆகிய 6 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் கலையரசன் ஆதிரை ஆகியோருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ள நிலையில் பிரவீன்காந்திக்கு ஓட்டுகள் மிகவும் குறைவாக வந்திருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் இறுதியில் இது மாறலாம்.
வாட்டர் மெலன் திவாகரை பொருத்த வரை அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தால் ஏதேனும் கோமாளித்தனம் செய்துக்கொண்டே இருப்பார். அதனால் கண்டென்ட் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால் அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் வாரத்திலேயே அனுப்பிவிட மாட்டார்கள். அடுத்து கலையரசன் அல்லது இயக்குனர் பிரவீன் காந்தி இருவரும்தான் ஓட்டுகள் எண்ணிக்கையில் பின்தங்கி இருப்பதால் அவர்களில் ஒருவர் நிச்சயமாக வீட்டை விட்டு முதல் வாரத்தின் இறுதியில் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





