- Advertisement -
Homeபொழுதுபோக்குநட்புக்காக அதை செய்ய வேண்டாம் என்று நான் சொன்னதை இயக்குனர் கேட்கவில்லை, பிரபல இயக்குனர் சொன்ன...

நட்புக்காக அதை செய்ய வேண்டாம் என்று நான் சொன்னதை இயக்குனர் கேட்கவில்லை, பிரபல இயக்குனர் சொன்ன தகவல் – பிளடி பெக்கர் படத்துக்கு முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக கவின் இருக்கிறார். விஜய் டிவியில் சீரியல் நடிகராக அறிமுகமான கவின், அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து அவர் நடித்த டாடா படம் பெரிய அளவில் அவருக்கு கவனத்தை பெற்றுத் தந்தது. லிப்ட், ஸ்டார் படங்களும் கவினுக்கு நல்ல படங்களாக அமைந்தன.

இப்போது நடிகர் கவின் நடிப்பில் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துக்குமார் டைரக்ட் செய்திருக்கிறார். இவர் இதற்கு முன் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

பிளடி பெக்கர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் கவின் ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் காணப்பட்டார். இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நேற்று பிளடி பெக்கர் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பை, கவனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நெல்சன் திலீப்குமார் பேசியதாவது, முதலில் இந்த படத்திற்கு கதாநாயகனாக கவின் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சிவபாலன் கூறியபோது நான் ஆரம்பத்திலேயே அதை மறுத்தேன்.

அப்போது கவின் நடித்த டாடா படம் வெளியாகவில்லை. சிவபாலனிடம் நீ நட்புக்காக எதுவும் செய்ய வேண்டாம். அதை தனியாக செய்து கொள் என்றேன். ஆனாலும் அவர் பிடிவாதமாக எனக்கு கவின்தான் கதாநாயகனாக வேண்டும் என்றார். படப்பிடிப்பு பணி முடிந்தபின் திரைப்படத்தை பார்த்த பிறகு தான் தெரிந்தது.

இந்த படத்தில் நடிகர் கவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு ஒருவரை பொருத்திப் பார்க்க முடியவில்லை. இதற்கு முன் இந்த படத்திற்கு நடிகர் தனுஷ் அல்லது விஜய் சேதுபதி தான் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன், என்று இயக்குனர் நெல்சன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது

சற்று முன்