- Advertisement -
Homeபொழுதுபோக்குமிஷ்கின், விஜய் சேதுபதி இணைந்த ட்ரெயின் படத்துல நடிக்கப் போறது இந்த இயக்குநரா? - அப்ப...

மிஷ்கின், விஜய் சேதுபதி இணைந்த ட்ரெயின் படத்துல நடிக்கப் போறது இந்த இயக்குநரா? – அப்ப படமே தரமான சம்பவமா இருக்கும் போல

- Advertisement -

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் ட்ரெயின் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். கோவையில் இருந்து சென்னை வரும் ரயிலில் நடக்கிற சம்பவங்களை அடிப்படையாக கொண்டதுதான் இந்த கதை. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படமாகவும் இது உருவாக்கப்படுகிறது.

ட்ரெயின் படத்தில் ஹீரோயினாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், சிங்கம்புலி, அஜய் ரத்னம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குவதோடு மிஷ்கின் இசையமைக்கவும் செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி நடந்து வருகிறது.

- Advertisement -

மிஷ்கின் படங்கள் என்றாலே, அது வேற லெவலில் இருக்கும் என்பதை பல படங்களில் அவர் நிரூபித்து இருக்கிறார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் மிஷ்கின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும், சவரக்கத்தி, ஓ நந்தலாலா, மாவீரன், லியோ என மிரட்டலான, நெகிழ்ச்சியாக தனது நடிப்புத்திறனை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதற்கிடையே இயக்குநர்கள் அமீர், லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் இயக்குநர் வெற்றிமாறனை தங்களது படங்களில் நடிக்க தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். அதிலும், லோகேஷ் கனகராஜ் தனது 3 படங்களில் நடிக்க வெற்றிமாறனுக்கு அழைப்பு விடுத்த நிலையில், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இயக்குவதில் மட்டுமே எனக்கு விருப்பம். நடிகராக, திரையில் தோன்றுவதில் விருப்பமில்லை என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதில், இப்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தில், இயக்குநர் வெற்றிமாறன் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தின் துவக்க விழா பூஜையிலும் வெற்றிமாறன் பங்கேற்று உள்ளார். இது அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ட்ரெயின் படத்தில், இயக்குநர் வெற்றிமாறன் கேமியோ ரோலில்தான் நடிக்கிறார். அதாவது சிறப்பு தோற்றத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் வருவார். மற்றபடி படம் முழுக்க வரும் கேரக்டரில் அவர் நடிக்கவில்லை. அதுவும் மிஷ்கின், விஜய் சேதுபதியின் தொடர் அழுத்தம் காரணமாகவே, இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஏனெனில் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ஆனால், இந்த படம் மட்டுமே விதிவிலக்கா, அல்லது தொடர்ந்து வெற்றிமாறன் படங்களில் நடிப்பாரா, என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

- Advertisement -

சற்று முன்