- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் இணையும் அஜீத்குமார் - சிறுத்தை சிவா கூட்டணி; அந்த சென்டிமென்ட் இப்பவும் தொடர்கிறதா? இந்த...

மீண்டும் இணையும் அஜீத்குமார் – சிறுத்தை சிவா கூட்டணி; அந்த சென்டிமென்ட் இப்பவும் தொடர்கிறதா? இந்த முறை ரசிகர்களே களம் இறங்கிட்டாங்களே…

- Advertisement -

நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு சிவாவை சிறுத்தை சிவா என்றே தமிழ் சினிமாவில் ரசிகர்களும், திரைத்துறையினரும் அழைக்க அதுவே நிலைத்துவிட்டது. இவரது தம்பி பாலா, தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். தவமின்றி கிடைத்த வரமே பாடல் காட்சியில் நடித்த ஹீரோ அவர்தான்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான கங்குவா படம், எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களுக்கு திருப்தியளிக்காத நிலையில் படம் குறித்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

- Advertisement -

அதனால் உலகம் முழுவதும் முதல் நாளில் 58 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ. 14 கோடியும், 2ம் நாளில் 6 கோடி ரூபாய் என 2 நாட்களில் மொத்தம் 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. கங்குவா படத்துக்கு கத்துவா என பெயர் வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில் கூறுகையில், சிறுத்தை சிவா, அடுத்து அஜீத்குமார் நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார். அதன்பிறகு கங்குவா படத்தின் 2ம் பாகம் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் துவங்கும் என்று உறுதிபடுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே அஜீத்குமார் நடித்த வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் என 4 படங்களை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இதில் விவேகம் படம் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் பாராட்டப்பட்டது. ஆனால் படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. ஆனால் மற்ற 3 படங்களும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. இந்த நான்கு படங்களுமே வி எழுத்தை டைட்டிலில் முதல் எழுத்தாக கொண்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அஜீத்குமார், சிறுத்தை சிவா இணைவதால் அதே போல் வி சென்டிமென்ட் பெயரை டைட்டிலாக வைக்க வேண்டும் என்பதால், இந்த முறை ரசிகர்களே வி என்ற முதல் எழுத்தை கொண்ட பெயர்களை டைட்டில்களாக கூறி வருகின்றனர். இதில் சிலர் நல்ல டைட்டில்களை கூறினாலும், கங்குவா தந்த வெறுப்பால் கிண்டலாக பெயர்களை கமெண்ட் செய்தும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்