விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவர், திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். காஷ்மீரில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக சென்னையில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதேபோல் சிலம்பரசனின் 48வது திரைப்படமும் கமலின் தயாரிப்பிலேயே உருவாகிறது. வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறோர்.
ஆனால் இதன் சூட்டிங் பணியில் இன்னும் ஆரம்பமாகாமல் உள்ளது. இதன் நடுவே, ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் ஆகியோரின் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். அதுபோக தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் கல்கி படத்தில் கமல்ஹாசன் இருக்கிறார். அதில் அவருக்கு வில்லன் கதாபாத்திரமாம். பிரபாஸ் அமிதாப்பச்சன் தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
வினோத் இயக்கும் திரைப்படத்திற்கு கமல்ஹாசன்தான் கதை எழுதுகிறாராம். அவர் ஏற்கனவே எடுப்பதாக இருந்த தலைவன் இருக்கிறான் படத்தின் கதை தான் இது என்று கூறப்படுகிறது. இதற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார் வினோத். இதன் சூட்டிங்கை விரைவில் எடுத்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு பிறகு மணிரத்னமுடன் கமல் இணைகிறார். இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இதன் இன்ட்ரோ வீடியோ சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என தனது கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து கொண்டார் கமல்ஹாசன்.
படத்திற்கு தக் லைப் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் உடன் துல்கர் சல்மான் ஜெயம் ரவி திரிஷா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது புதிய தகவலாக கௌதம் கார்த்திக் படத்தில் இணைந்துள்ளார். அவருக்கு முக்கிய கதாபாத்திரத்தை மணிரத்னம் வைத்திருக்கிறாராம். கடல் திரைப்படத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக் மீண்டும் மணிரத்னத்துடன் இணைவது குறிப்பிடத்தக்கது.





