- Advertisement -
Homeபொழுதுபோக்குகடவுள் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கிறார், ஜாலியா இருங்க, அதுக்காக பீல் பண்ணாதீங்க - மாணவ,...

கடவுள் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கிறார், ஜாலியா இருங்க, அதுக்காக பீல் பண்ணாதீங்க – மாணவ, மாணவியருக்கு விஜய் சொன்ன அறிவுரை

- Advertisement -

நடிகர் விஜய் கடந்தாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிரை சென்னைக்கு வரவழைத்து பரிசளித்தார். ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பெற்றோர்கள் என அங்கு திரண்டதால் காலை துவங்கி, நள்ளிரவு வரை அந்த விழா நடைபெற்றது.

ஒரே நாளில் தமிழகம் முழுவதும் அதிக மாணவ, மாணவியர் வந்த நிலையில், 10 மணி நேரத்துக்கு மேல் மேடையில் நடிகர் விஜய் கால்கடுக்க நின்று அவதிப்பட்டார். விழாவுக்கு வந்தவர்களும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும், விழா முடிந்த பிறகு தொலைதூர ஊர்களுக்கு திரும்பிச் செல்வதில் போக்குவரத்து சிரமங்களும் ஏற்பட்டது.

- Advertisement -

இதையடுது்து இந்த முறை ஜூன் 28, ஜூலை 3ம் தேதி என இரண்டு கட்டங்களாக இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு, கடந்த 28ம் தேதி நடிகர் விஜய், கல்வி விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். 2ம் கட்டமாக இன்று 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகளை காலை முதல், சென்னை திருவான்மியூரில் வழங்கி வருகிறார்.

இரண்டாம் கட்டமாக துவங்கிய இன்றைய விழாவில் விஜய், நீட் குறித்த சில கருத்துகளை பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். நான் எதுவும் பேசப் போறது இல்லை. அட்வைஸ் பண்ணி போரடிக்க விரும்பவில்லை என்று, 28ம் தேதி நடந்த விழா முடிவில் பேசிச் சென்ற விஜய், இந்த விழாவில் அவராகவே முன்வந்து நீட் பற்றி பேசினார். இந்த நேரத்தில் நீட் பற்றி பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது, என்று தோன்றியதால் தான் பேசுகிறேன், என்றும் குறிப்பிட்டார்.

- Advertisement -

தொடர்ந்து பேசுகையில், மத்தபடி இங்கு வந்திருக்கிற என்னுடைய பிரண்ட்ஸ், லேர்னிங் ஈஸ் பஃன், எஜூகேசன் ஈஸ் செலபரேசன், ஜாலியா படிங்க. ஸ்ட்ரெஸ் எல்லாம் எடுத்துக்காதீங்க. இந்த உலகம் ரொம்ப பெரியது. ரொம்ப ரொம்ப பெரியது. வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது.

அதனால் ஏதாவது ஒன்று, ரெண்டு மிஸ் பண்ணினாலும் பீல் பண்ணிடாதீர்கள். அப்படின்னா அதை விட பெரிய ஒரு வாய்ப்பை கடவுள் வைத்துக்கொண்டு உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கிறார் என்று அர்த்தம். அதை என்னவென்று தேடிக் கண்டுபிடியுங்கள். மன உறுதியோடு இருங்கள், நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம், வெற்றி நிச்சயம் என்று பேசியிருக்கிறார் நடிகர் விஜய்.

- Advertisement -

சற்று முன்