- Advertisement -
Homeபொழுதுபோக்குவிதார்த் நடித்த படத்துக்கு இப்படி ஒரு அதிரடி அறிவிப்பா?, சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்களை வரவழைக்க...

விதார்த் நடித்த படத்துக்கு இப்படி ஒரு அதிரடி அறிவிப்பா?, சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்களை வரவழைக்க சூப்பர் ஐடியா – இத கொஞ்சம் நோட் பண்ணுங்கப்பா

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறிப்பிடதக்க யதார்த்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விதார்த். மைனா, குற்றம் குற்றமே போன்ற படங்களில் இவர் தனது யதார்த்த நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தி இருப்பார். நல்ல கதைகள், நல்ல கேரக்டர்களை தேர்வு செய்யும் நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். சிறந்த யதார்த்த நடிகர் வரிசையில் முன் வரிசையில் இவருக்கு இடமுண்டு.

விதார்த் நடிப்பில் 1000 பொற்காசுகள் என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது சின்ன பட்ஜெட் படம் என்பதால், இந்த படத்துக்காக ஒரு அதிரடி அறிவிப்பை தயாரிப்பாளர், டைரக்டர் கேஆர் வெளியிட்டு இருக்கிறார். அது இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வருபவர்களுக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்பதுதான் அந்த அறிவிப்பு.

- Advertisement -

அதாவது சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் பெரும்பாலும் வருவதில்லை. இப்படி ஒரு டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம் என்றால், படம் பார்க்க அதிக ரசிகர் கூட்டம் வரும். அப்போது, அந்த படம் பார்த்த ரசிகர்கள், படம் குறித்த தங்களது விமர்சனத்தை வெளிப்படுத்துவர். அதுவே, படத்துக்கு சிறந்த பிரமோவாக மாறி, படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

வழக்கமாக பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது வழக்கத்தை விட 3 மடங்கு அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்கும் இன்றைய சூழலில், சின்ன பட்ஜெட் படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க இந்த முயற்சி அறிவிப்பு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை பின்பற்றி, பார்க்கிங் கட்டணம் இலவசம் போன்ற திட்டங்களையும் செயல்படுத்த முன்வரலாம்.

- Advertisement -

ஆடி மாதத்தில் திருமண முகூர்த்தங்கள், விசேஷ நிகழ்வுகள் நடத்தப்படாத நிலையில், அந்த மாதத்திலும் வாடிக்கையாளர்களை ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளுக்கு வரவழைக்கும் விதமாக, சிறப்பு அதிரடி சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்த சலுகைகளால் வாடிக்கையாளர் கூட்டம் வருகிறது. வியாபாரத்திலும் நஷ்டம் இல்லாமல், தவிர்க்க முடிகிறது.

அந்த வகையில் 1000 பொற்காசுகள் படத்துக்கு, முதல் நாள் முதல் காட்சிக்கான இந்த அறிவிப்பு, ரசிகர்களுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது. சின்ன பட்ஜெட் படங்கள் என்பது கதையை நம்பியும், சிறந்த நடிப்பை நம்பியும் எடுக்கப்படுகிறது. யதார்த்த சினிமாவை விரும்புபவர்களை திருப்திபடுத்தும் இந்த படங்களும், பெரிய படங்களை போல பெரிய அளவில் பேசப்படவும் வேண்டும். அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்று சேர வேண்டும். அதற்காக இதுபோன்ற சிறப்பு சலுகைகளை கையில் எடுப்பதும் மிகச்சிறந்த புத்திசாலித்தனம்தான்.

- Advertisement -

சற்று முன்