நடிகர் கமல்ஹாசன் கடவுள் மறுப்பாளர் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். தசாவதாரம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கூட, கடவுள் இல்லை என்று நான் எப்போது சொன்னேன். கடவுள் இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் சொன்னேன் என்று பேசியிருப்பார். ரஜினி ஆன்மிகவாதி என்றால், இவர் பகுத்தறிவாதி என்பது தமிழ் சினிமா உலகம் அறிந்ததுதான்.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் பஞ்சதந்திரம். இந்த படத்தில் கமலுடன் சிம்ரன் ரம்யா கிருஷ்ணன் ஊர்வசி ஜெயராம் ரமேஷ் அரவிந்த் யோகி சேது ஸ்ரீமன் நாகேஷ் மணிவண்ணன் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அடுத்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 10 வித்யாசமான வேடங்களில் நடித்த படம் தசாவதாரம். கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அசின், ரேகா, கேஆர் விஜயா, பி வாசு, நாகேஷ், நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தனது 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி வெளியான படம் விக்ரம். கமல்ஹாசன் நடித்த இந்த படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. விக்ரம் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, அர்ஜூன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கமலுக்கு இது கம்பேக் படமாக அமைந்திருந்தது.
பஞ்சதந்திரம், தசாவதாரம், விக்ரம் என கமல் நடித்த இந்த படங்கள் ஜூன் மாதம் வெளியானது. ஜூன் மாதம் வெளியான சென்டிமென்ட் காரணமாக இந்த படங்கள் அனைத்துமே பிளாக் பஸ்டர் படங்களாக வெற்றி பெற்றதாக ஒரு சென்டிமென்ட் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாயகன் படம் வெளியாகி 36 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவான படம் தக்லைப். இந்த படத்தில் திரிஷா சிம்பு ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படமும் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. பகுத்தறிவு பேசும் கமல்ஹாசன், ஜூன் மாத சென்டிமெண்ட் காரணமாக தக்லைப் படத்தை 7 மாதங்கள் தள்ளி வைத்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





