- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஆகுமுன்னு நான் நினைச்சு கூட பார்க்கலையே, கிளிசரின் போடாமலேயே கண்ணீர் விட்ட நயன்தாரா -...

இப்படி ஆகுமுன்னு நான் நினைச்சு கூட பார்க்கலையே, கிளிசரின் போடாமலேயே கண்ணீர் விட்ட நயன்தாரா – இந்த பீலிங்குக்கு இதுவா காரணம்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மிக குறைவாகவே வருகின்றன. சில நேரங்களில் அத்தி பூத்தது போல மிக அம்சமான படங்களும் ரசிகர்களை மகிழ்விக்க வருகின்றன. தமிழ் சினிமாவை பொருத்த வரை கமர்ஷியல் ஹீரோக்களும், கொள்ளை லாபம் சம்பாதிக்கவுமே நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஆசைப்படுவதால் அதற்கேற்ப கதை பண்ணவே இயக்குநர்களும் முன்வருகின்றனர்.

ரசிகர்களை பொருத்த வரை நல்ல படங்களை அவர்கள் என்றுமே தவற விடுவதில்லை. சமீபத்தில் வெளிவந்த குய்கோ படம் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. படம் பார்த்த பலரும், தங்களது சமூகவலைதள பக்கங்களில் அந்த படம் குறித்து பாராட்டி எழுதி, மற்றவர்களையும் அந்த படம் குறித்து கவனிக்க வைத்தனர்.

- Advertisement -

அதே போல், மிக குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட காந்தாரா படம் முதலில் கன்னடத்தில் மட்டுமே வெளியானது. அங்கு ரசிகர்கள் கொடுத்த அபரிமிதமான வரவேற்பை பார்த்து அசந்துபோன ரிஷப் ஷெட்டி, தெலுங்கு, தமிழ், இந்தி என பிறமொழிகளிலும் அந்த படத்தை ரீமேக் செய்ய எல்லா மொழிகளிலும் எல்லா தரப்பு ரசிகர்களுமே அந்த படத்துக்கு அதே வரவேற்பை கொடுத்து பாராட்டினர். அதனால் காந்தாரா படத்தின் மொத்த வசூல் ரூ. 400 கோடியை தாண்டியது.

அதுபோல் இப்போது நயன்தாரா நடிப்பில் வெளிவந்துள்ள படம், அன்னபூரணி. இந்த படத்தில் பிராமண பெண்ணான நயன்தாரா, எப்படி சமையல் போட்டியில் ஜெயிக்கிறார் என்பதுதான் கதை. ரசிகர்கள் விரும்பும் விதமான திரைக்கதையில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வெள்ளியன்று இந்த படம் ரிலீஸ் ஆனது.

- Advertisement -

அதே போல், நாடு என்ற படமும் மருத்துவர் உலகம் பற்றி பேசக்கூடிய படமாக இருக்கிறது. தர்ஷன் மற்றும் மகிமா நம்பியார் நடித்துள்ள இந்த படமும், மலைகிராமத்துக்கு வந்த டாக்டரை அங்கேயே தங்க வைக்க மக்கள் போராடும் கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கிறது. அதே போல், பார்க்கிங் படமும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு முக்கிய படமாக உள்ளது.

இந்த 3 படங்களும் ரிலீஸ் ஆன இந்த நேரத்தில் சென்னையில் பலத்த மழை, மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறிவிட்டது. சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் மழையால் பலத்த சேதங்களை சந்தித்துள்ள நிலையில், இந்த படங்கள் திரையிட்ட தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியுமா என்ற கவலையில் தயாரிப்பாளர்கள் தவிக்கின்றனர். நல்ல படம், ரசிகர்களிடம் சென்று சேர முடியாமல் மழை தடுத்துவிட்டதே என்ற கவலையில் நயன்தாரா போன்றவர்கள் அழுதே விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

சற்று முன்