- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம்… பிரசார இடங்களில் ஏற்படும் சேதங்களுக்கு தவெக தான் பொறுப்பு - கடும்...

மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம்… பிரசார இடங்களில் ஏற்படும் சேதங்களுக்கு தவெக தான் பொறுப்பு – கடும் நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தீவிர அரசியல் களத்தில் இருந்து வருகிறார். விக்கிரவாண்டியிலும் தொடர்ந்து மதுரையிலும் அரசியல் மாநில மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி முடித்த நடிகர் விஜய், இப்போது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார். வருகிற டிசம்பர் 20ம் தேதி வரை மாவட்டம் வாரியாக சென்று மக்களை சந்திக்கிறார்.

கடந்த வாரம் 13ம் தேதி உங்க விஜய் நான் வரனே் என்ற வாசகங்களுடன் இந்த மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் துவங்கிய நடிகர் விஜய், பிறகு அரியலூரிலும் பேசினார். தொடர்ந்து நாளை 2வது சனிக்கிழமை நாகை திருவாளூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசுகிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் திருச்சிக்கு வந்த போது விமான நிலையத்தில் இருந்து மரக்கடை என்ற பகுதிக்கு வந்து சேரவே 5 மணி நேரம் ஆகி விட்டது. இதனால் பல மணி நேரம் மக்கள் காத்திருந்தனர். அதுமட்டுமின்றி திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பகுதிக்கு வரும் வழியில் ரோடு முழுக்கவும் மக்கள் திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

நாகப்பட்டினத்தில் நாளை மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிற தவெக தலைவர் விஜய்க்கு 20 நிபந்தனைகளை விதித்து காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதி இல்லை. நாளை முற்பகலில் 35 நிமிடங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

- Advertisement -

விஜயின் பிரசார வாகனத்திற்கு பின்னால் ஐந்து வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். விஜயின் பிரச்சாரத்துக்கு வரும் வாகனங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. பரப்புரையின் போது பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது. பிரச்சாரத்தின் போது சேதம் அடையும் சொத்துக்களுக்கு தவெக கட்சியினரே பொறுப்பேற்க வேண்டும்.

விதிகளை மீறினால் பரப்புரையை இடையிலேயே நிறுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளது. விஜயின் பிரச்சாரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. இசைக்குழுவை பயன்படுத்தக்கூடாது. பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்டணி சிக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 நிபந்தனைகளுடன் நாளை நடிகர் விஜய் மேற்கொள்ளும் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.

- Advertisement -

சற்று முன்