- Advertisement -
Homeபொழுதுபோக்குநீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குநராக சசிக்குமார், பிரபல நடிகரின் மகன்தான் ஹீரோ -...

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குநராக சசிக்குமார், பிரபல நடிகரின் மகன்தான் ஹீரோ – அவர் எடுக்கப் போற கதை வேற லெவலுங்க

- Advertisement -

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக சேது, நந்தா படங்களில் பணிபுரிந்தவர் சசிக்குமார். டைரக்டர் பாலா இயக்கிய சேது படத்தை தயாரித்தவர் மதுரையை சேர்ந்த கந்தசாமி. அவர் சசிக்குமாரின் உறவுக்காரர் என்பதால் படத்தின் தயாரிப்பு வரவு செலவுகளை கவனித்துக்கொள்ள சசிக்குமாரை சென்னைக்கு, டைரக்டர் பாலாவிடம் அனுப்பி இருக்கிறார்.

அப்படி வந்தவர்தான் நாளடைவில் சினிமா ஆர்வம் காரணமாக டைரக்டர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிசெய்திருக்கிறார். நந்தா படத்திலும் சசிக்குமாரும், அமீரும் உதவி இயக்குநர்களாக பணிசெய்திருக்கின்றனர். அதன்பின் பாலாவை விட்டு வந்த அவர்களில் அமீர் இயக்குநராகி படம் இயக்க, அவரிடம் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் படங்களில் உதவி இயக்குநராக பணிசெய்தவர்தான் சசிக்குமார்.

- Advertisement -

சசிக்குமார் இயக்குநராக எடுத்த சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் உடன் பரமன் கேரக்டரில் நடிக்க வேறு நடிகர் யாரும் கிடைக்கவில்லை. கடைசியில் அந்த கேரக்டரில் சசிக்குமாரே நடிக்க வேண்டிய நிர்பந்தத்தால் நடிகரானார் சசிக்குமார். எனினும் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இயக்குநராக, நடிகராக மிகப்பெரிய இடத்துக்கு வந்துவிட்டார் சசிக்குமார்.

தொடர்ந்து அவர் இயக்கிய ஈசன் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால் நடிகராக பல படங்களில் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. குட்டிப்புலி, கெடாரி, நாடோடிகள், நாடோடிகள் 2, தாரை தப்பட்டை, பேட்ட, பலே வெள்ளையத்தேவா, சுந்தரபாண்டியன், வெற்றிவேல், உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி என பல படங்கள் சசிக்குமாருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.

- Advertisement -

இந்நிலையில் இப்போது இயக்குநராக மீண்டும் சசிக்குமார் களம் இறங்குகிறார். பிரிட்டிஷ் காலத்தில் நடந்த சம்பவங்களை மையப்படுத்திய ஒரு கதையை 20 எபிசோடுகள் வரையான வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக நடிப்பவர், கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்தான். இதற்காக சில மாதங்களாக ப்ரீ புரொடெக்சன் பணிகள் வேகமாக நடந்துக்கொண்டு இருக்கின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

நடிகர் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை வைத்து, குற்றப்பரம்பரை என்ற தனது கனவு படத்தை இயக்க பாரதிராஜா ஆசைப்பட்டார். ஆனால், அது தனது கதை என ரத்தினக்குமார் கோர்ட்டுக்கு சென்ற நிலையில், அவரால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் சசிக்குமார் எடுக்கும் இந்த படம், குற்றப்பரம்பரை நாவலை மையப்படுத்திய கதைதான் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்