முன்பெல்லாம் ஒரு படத்துக்கு தலைப்பு வைப்பது என்றால், மாதக்கணக்கில் இயக்குநர்கள், தயாரிப்பாளர் யோசிப்பார்கள். ஏனெனில் படத்தின் கதைக்கேற்ப டைட்டில் இருக்க வேண்டும். டைட்டில் பேசப்படும் வகையில் மாஸாக இருக்க வேண்டும். அதுவும் ரஜினி, கமல் படங்கள் என்றால் தலைப்பே வெற்றியை சொல்லி விடும்.
ஆனால் இந்த தலைப்பு பிரச்னை ஒரு கட்டத்துக்கு பிறகு இயக்குநர்களுக்கு வெகு சுலபமாக போய்விட்டது. ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்களின் படங்களுக்கு டைட்டில் வைப்பது மிக எளிதான விஷயமாக ஒரு கட்டத்தில் மாறிப்போனது. அதனால் இதில் இயக்குநர்கள் அதிக சிரமம் ஏற்படவில்லை.
அதாவது படத்தில் ஹீரோவின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைப்பது பேஷனாகி போனது. அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா, அருணசாலம், பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் வரை அது ரஜினிக்கு தொடர்கிறது. கமலின் படங்களிலும் பல படங்கள் கதாநாயகனை மையப்படுத்திய பெயர்களாக தான் இருக்கின்றன.
அந்த வகையில் இப்போது அஜீத்குமார் நடிக்கும் படத்தின் ஒரு வரி கதைதான். அதாவது காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடிக்க விடாமுயற்சியாக அவர் தேடுவதுதான் இந்த படத்தின் கதை என தெரிய வந்துள்ளது. அதாவது கணவன், மனைவி அஜித், திரிஷா நடித்துள்ள நிலையில், திரிஷா ஓரிடத்தில் காணாமல் போய்விடுகிறார். வில்லன் அர்ஜூனிடம் சிக்கிய திரிஷாவை அஜீத்குமார் மீட்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தின் கதை ஏற்கனவே ஹாலிவுட் படம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதுதான். அதில் காதலன், காதலியாக செல்லும் போது காதலி காணாமல் போய் வில்லனிடம் சிக்கிக்கொள்வாள். அதை ஆங்கில கதாநாயகன் மீட்டு வருவான். அதே கதையை பட்டி, டிங்கரிங் பார்த்து, பெயிண்ட் அடித்து அஜீத் படமாக மாற்றியதாக தகவல் பரவி வருகிறது.
இந்த கடத்தல் கதை எல்லாம் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இருக்கிறது. இப்படிப்பட்ட கதைகளை இந்த 21ம் நூற்றாண்டிலும் தமிழ் சினிமாவில் எடுத்துக்கொண்டிருப்பது இயக்குநர்களிடம் இருக்கும் கற்பனை வறட்சியை தான் காட்டுகிறது. லியோ, தக்லைப் படங்களும் இப்படி ஆங்கில படங்களின் தழுவல்தான் எனும்போது, இது இன்னும் தமிழ் தொடரவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.





