- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சியில இந்த நடிகர் இருப்பது உறுதியாகி போச்சு... போட்றா வெடிய, என கொண்டாடும் ஏகே ரசிகர்கள்...

விடாமுயற்சியில இந்த நடிகர் இருப்பது உறுதியாகி போச்சு… போட்றா வெடிய, என கொண்டாடும் ஏகே ரசிகர்கள்…

- Advertisement -

நடிகர் அஜித் குமாருக்கு இந்த வருடம் துணிவு திரைப்படம் வெளியானது. எச் வினோத் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஏற்கனவே அவர் அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை கொடுத்திருந்தார். இதில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஆனால் வலிமை திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படியான சூழ்நிலையில் கடந்த பொங்கலன்று வெளியான துணிவு திரைப்படம், வசூல் ரீதியாக ஹிட் அடித்தது. இந்த படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் உடன் அஜித் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும், விக்னேஷ் இவனுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த ப்ராஜெக்ட் நின்று போனது.

இதன்பிறகு மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக லைக்கா நிறுவனம் அறிவித்தது. இதனை அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி படக்குழு நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதன் பிறகு இதன் சூட்டிங் தொடங்கப்படவே இல்லை.

அடுத்த கட்ட அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்க தல அஜித் குமாரோ பைக்கை எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் ஊர் சுற்ற ஆரம்பித்தார். அதேசமயம் எழுத்து வேலைகளில் மகிழ் திருமேனி பிஸியாக இருந்ததாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கியது.

க்ரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் புகழ்பெற்ற மகிழ் திருமேனி, இதனையும் அதே ரூட்டில் எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற, அங்கு கார் சேசிங் காட்சிகள் எடுக்கப்பட்டன. ஒரு மாத படப்பிடிப்பிற்கு பிறகு சென்னை திரும்பினார் அஜித்குமார். அவர் இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து இருக்கிறார்.

சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றார். அங்கு 70% படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்த நிலையில் அர்ஜுனும் படத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது. ரசிகர் ஒருவர் சூட்டிங் நடைபெறும் இடத்தில், அஜித்துடனும் பிறகு அர்ஜுன் உடனும் தனித்தனியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனிடையே சஞ்சய்தத், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் படத்தில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சற்று முன்