நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய படம் தனி ஒருவன். கடந்த 2015ம் ஆண்டில் வெளிவந்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில் ஜெயம் ரவி, ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் தம்பி ராமையா, நாசர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். முக்கியமாக வில்லன் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி வேற லெவலில் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பு, தனி ஒருவன் படத்தை இன்னும் அதிக உச்சத்துக்கு கொண்டு சென்றது.
ஐபிஎஸ் படிக்கும் ஜெயம் ரவி உள்ளிட்ட 5 ஐபிஎஸ் ஆபீசர்ஸ், மருத்துவத்துறையில் ஊழல் செய்யும் வில்லன் அரவிந்த் சாமியை கைது செய்யவும், அவரது சமூகத்துக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடிக்கும் இந்த கதையில், பல காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். குறிப்பாக ஜெயம் ரவி உடம்புக்குள் மைக்ரோசிப் மைக் வைத்து, அவர் பேசுவதை தெரிந்துக்கொண்டு, அதற்கேற்ப அரவிந்த் சாமி செயல்படுவது எல்லாம் வேற லெவலில் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
தற்போது இந்த படத்தை தனிஒருவன் 2 என்ற பெயரில் எடுக்க, இயக்குநர் மோகன் ராஜா தயாராகி வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்குவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் ஜெயம் ரவியே ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. மீண்டும் இதில் நயன்தாராவே நடிப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் இறைவன் படத்தில் அவர் நடித்தும் படம் வெற்றியடையாததால் வேறு நாயகி நடிக்க அதிக வாய்ப்புள்ளது.
தனி ஒருவன் படத்தை பொருத்த வரை, இது ஹீரோ – வில்லன் என இருவருமே மிகப்பெரிய புத்திசாலிகளாக இருப்பர். அவர்களில் யாருடைய புத்திசாலித்தனம் வென்றது என்பதுதான் கதையின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்தது. அந்த வகையில் அரவிந்த் சாமிதான் தனி ஒருவன் முதல் பாகத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்தார். ஆனால் அந்த படத்தில் அவர் க்ளைமேக்ஸில் இறந்து விடுவார் என்பதில் 2ம் பாகத்தில் அவர் நடிக்க வாய்ப்பின்றி போனது.
அதனால் தனிஒருவன் 2ம் பாகத்தில் அரவிந்த் சாமியை போன்ற மிக வலுவான. அழகான. அவரை போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு நடிகர்தான் நடிக்க வேண்டும் என இயக்குநர் மோகன் ராஜா விரும்பிய நிலையில், வில்லன் கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் மகன், நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவரான இவர், தமிழ் படத்தில் முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சம்பளம், கால்ஷீட் குறித்த விவரங்கள் அவரிடம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.





