லிங்கா கோச்சடையான் தர்பார் அண்ணாத்த எனத் தோல்வி படங்களால் தோண்டி இருந்த ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம், ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில், சிவராஜ் குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் தமன்னா, விநாயகம், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட ஏராளமான நடித்தனர். இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த திரைப்படம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், நெல்சனுக்கும், அனிருத்துக்கும் காரை பரிசாக வழங்கியது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.
இதில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். இதில் மொய்தின் பாய் எனும் கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இதற்கு இசையமைக்க லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் ரஜினி இணைந்திருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு வேட்டையன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் சூட்டிங் திருவனந்தபுரம் திருநெல்வேலி மும்பை சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது சூட்டிங்கிற்கு சின்ன இடைவெளி விடப்பட்டுள்ளது.
ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இடம் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதில் ரஜினி பேசிய குறி வச்சா இரை விழனும் டயலாக் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணைய இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதன் சூட்டிங் தொடங்குகிறது.
இந்த திரைப்படம் நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்றும், ஆக்சன் திரைப்படமாக இருந்தாலும் ஒரு புதிய முயற்சியை தொட்டு இருப்பதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார். அதுபோக இதில் நடிக்கும் பிரபலங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார். இதில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் முக்கிய ரோலுக்காக ஷாருக்கானை லோகேஷ் அணுகி இருக்கிறாராம். அப்போது ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், ஆனால் தொடர்ந்து பல திரைப்படங்களில் கேமியோ ரோலிங் நடித்து விட்டதால் இது தனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டாராம் ஷாருக்கான். இதே ரோலுக்கு ரன்வீர் சிங்கை அணுக, அவருக்கு அந்த கதாபாத்திரம் பிடித்து போய் உள்ளதாம். இருப்பினும் மொத்த கதையையும் அவர் கேட்டிருக்கிறாராம். இதனால் நிச்சயம் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.





