- Advertisement -
Homeபொழுதுபோக்குஎப்போதும் மேன்மக்கள் மேன்மக்களே… அம்பானி இல்ல திருமண விழா, நடிகர் ஷாருக்கான் செய்த அந்த விஷயம்…...

எப்போதும் மேன்மக்கள் மேன்மக்களே… அம்பானி இல்ல திருமண விழா, நடிகர் ஷாருக்கான் செய்த அந்த விஷயம்… நெகிழ்ந்த லதா – ரஜினிகாந்த்!

- Advertisement -

இந்திய சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் சினிமாவில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவர்கள் நடிப்புத்துறையில் செய்த சாதனைகள் எப்போதுமே அவர்களை அதே உயரத்தில் வைத்திருக்கின்றன. மற்ற நடிகர்கள், அவர்கள் திறமைக்கான புகழை அடைகிறார்களே தவிர, மற்றவர் இடங்களை பிடிப்பதில்லை.

உதாரணமாக தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் வெற்றி பெற்ற இடத்தையோ, சிவாஜிகணேசன் பெற்ற இடத்தையோ யாரும் பிடிக்க முடியவில்லை. அதே போல் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் என அவரவர் வெற்றிப் பெற்ற இடங்களில் அவர்கள் இருக்கின்றனர். மற்றபடி ஒருவர் புகழால் ஒருவர் புகழ் குறைவது இல்லை.

- Advertisement -

இப்போது மும்பையில், முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழா களை கட்டியிருக்கிறது. முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் பாலிவுட் நடிகர்கள், கோலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், இந்திய தொழிலதிபர்கள் என விவிஐபிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த திருமண விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், மணமக்களுடன் நடனமாடிய வீடியோ நேற்றிரவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் அனில் கபூர், ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் சேர்ந்து நடனமாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் நயன்தாரா, சூரியா ஜோதிகா, அட்லி – பிரியா உள்ளிட்ட பல நட்சத்திர ஜோடிகள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில், தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஒரு பகுதியில் வரிசையாக அமர்ந்துள்ளனர். அப்போது பின்பகுதியில் இருந்து நடந்து வரும் பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், ரஜினி, லதா ரஜினிகாந்த் முன்னால் வந்து பணிவாக குனிந்து, இருவருக்கும் வணக்கம் சொல்கிறார்.

ஷாருக்கானின் இந்த செயலை பார்த்து நெகிழ்ந்த போன ரஜினிகாந்த், கைூப்பி ஷாருக்கான் கைபிடித்து கொள்கிறார். அடுத்து அருகில் இருந்த சச்சின் டெண்டுல்கருக்கும் கை கொடுத்துவிட்டு திரும்பும் நடிகர் ஷாருக்கான், அப்போது எதிரில் வந்த பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன், அருகில் நின்றிருந்த அவரது மனைவி ஜெயா பச்சன் இருவரது கால்களையும் தொட்டு வணங்கி வணக்கம் சொல்கிறார். வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்து வியந்த ரசிகர்கள், புகழின் உச்சியில் இருந்தும் ஷாருக்கான் இவ்வளவு மரியாதையாக, பணிவாக நடந்துக் கொள்கிறாரே, எவ்வளவு பெரிய விஷயம் இது என்று பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்