- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த அந்த பிளாக் பஸ்டர் படம் ரி ரிலீஸ்...

ஜனநாயகன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த அந்த பிளாக் பஸ்டர் படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறதா? பண்டிகையை கொண்டாடுங்கடே…!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் இதுவரை 69 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 69வது படம் ஜனநாயகன் நாளை மறுதினம் ரிலீஸ் ஆக உள்ளது. விஜய் இதுவரை நடித்த படங்களில் பல பிளாக்பஸ்டர் வெற்றிளை தமிழ் சினிமாவில் கொடுத்திருக்கிறார். அவரது திரைப்பயணத்தில் சில படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையாக அவருக்கு பலத்த வரவேற்பையும் வெற்றியையும் கொடுத்திருக்கிறது.

அந்த வரிசையில் இயக்குனர் பேரரசு இயக்கிய திருப்பாச்சி சிவகாசி ஆகிய 2 படங்களுமே நடிகர் விஜய்க்கு இப்போதும் புகழ் தரும் மிக அற்புதமான கமர்சியல் படங்களாக இருக்கின்றன. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த படம் திருப்பாச்சி. இந்த படம் கடந்த 2005ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

இந்த படம் 21 ஆண்டுகளுக்கு முன்பே 32 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த சிவகாசி படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. திருப்பாச்சி படத்தில் விஜய் திரிஷா மல்லிகா பசுபதி மனோஜ் கே ஜெயன் கோட்டா சீனிவாசராவ் பெஞ்சமின் மற்றும் பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

திருப்பாச்சி படத்துக்கு இசையமைப்பாளர்கள் மணி சர்மா தீனா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் இசையமைத்தனர். படத்தில் இடம்பெற்ற 7 பாடல்களையும் இயக்குனர் பேரரசு எழுதியிருந்தார். இந்த படம் தெலுங்கில் அன்னவரம் கன்னடத்தில் தங்கிகாகி என்ற பெயர்களில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை மல்லிகா நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் தனது தங்கையின் மகிழ்ச்சிக்காகவும் பாதுகாப்புக்காகவும் எந்த அளவுக்கும் செல்ல தயங்காத ஒரு அண்ணனின் பாசத்தை மிக இயல்பாக வெளிப்படுத்தி இருந்தார்.

இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். நாளை மறுதினம் 23ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அந்த படத்தை தொடர்ந்து விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படமும் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளனர். ஜனநாயகன் தொடர்ந்து திருப்பாச்சி படமும் திரைக்கு வருவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்