துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் அடுத்ததாக விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார். முதலில் அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், அது கடைசி நேரத்தில் மகிழ் திருமேனிக்கு மாறியது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அஜித் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது.
முன்தினம் பார்த்தேனே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மகிழ்திருமேனி. இதன் பிறகு அருண் விஜய் உடன் இணைந்து அவர் தடையற தாக்க திரைப்படத்தை எடுத்தார். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவான இந்த திரைப்படம், வெற்றி பெற்றது. தொடர்ந்து அது சார்ந்த திரைப்படங்களையே அவர் இயக்கி வருகிறார். மீகாமன், தடம், கலகத் தலைவன் ஆகிய திரைப்படங்கள் பெரிதாக பேசப்பட்டன.
இந்த சூழலில் தான் அவர் அஜித் குமாருடன் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் இதற்கான சூட்டிங் தொடங்கியது. இந்தப் படத்தில் அஜித்திற்கு மனைவியாக திரிஷா நடிக்கிறாராம். வில்லனாக அர்ஜுன் வர, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ரெஜினா. இதுபோக பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரபலம் அடைந்த ஆரவ், விடாமுயற்சியில் அஜித்திற்கு வில்லனாகிறார்.
இந்தத் திரைப்படமும் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பின் போது கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதன் நடுவே, படத்தின் ஒளிப்பதிவாளர் ஆன நீரவ் ஷா, திடீரென சென்னை திரும்பினார். இதை எடுத்து அடுத்த ஒளிப்பதிவாளர் யார் என்பதை படக்குழு யோசித்துக் கொண்டிருக்க, ஓம் பிரகாஷ் அதில் வந்து இணைந்தார்.
இவர் ஏற்கனவே ஆரம்பம் திரைப்படத்தில் பணிபுரிந்து இருந்தார். தற்போது விஷ்ணுவர்தன் படத்தில் பிஸியாக இருந்த ஓம் பிரகாஷை, அஜித் தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளாராம். விஷ்ணுவர்தனும் உடனடியாக ஓகே சொன்னதால், ஓம் பிரகாஷ் இணைந்து இருக்கிறார். இதனையில் படப்பிடிப்பில் அஜித், அர்ஜுன், ஆரவ் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.
படப்பிடிப்பு பணிகள் 50% நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் டிஜிட்டல் உரிமம் தற்போது விற்பனையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவி மற்றும் ஓ டி டி தளத்தில் நெட்ப்ளிக்ஸ் ஆகியவை விடாமுயற்சி படத்தை வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மொத்தம் 250 கோடி ரூபாய் கை மாதிரி இருக்கிறதாம். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படம் தற்போதைய அதன் பாதிக்கு மேல் தொகையை வசூலித்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





