- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யோட அடுத்த பட டைட்டில் இதுதான்... துணிஞ்சு லாக் பண்ணிக்கலாம்... பேர கேட்டாலே சும்மா அதிருதேப்பா...

விஜய்யோட அடுத்த பட டைட்டில் இதுதான்… துணிஞ்சு லாக் பண்ணிக்கலாம்… பேர கேட்டாலே சும்மா அதிருதேப்பா…

- Advertisement -

நடப்பாண்டு தளபதி விஜய்க்கு இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் பொங்கலன்று வெளியான வாரிசு திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் குடும்ப ஆடியன்ஸ்களை அந்த திரைப்படம் கவர்ந்ததால் வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில், லியோ திரைப்படம் ரிலீஸ் ஆனது.

முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், ஆனால் இரண்டாம் பாதி சரியில்லை என்றும் பெரும்பாலான விமர்சனங்கள் எழுந்தன. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார். ஆனால், தான் எடுத்த இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சி என்பது பொய் என்று கூறி, அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் லியோ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

- Advertisement -

கிட்டத்தட்ட அந்த திரைப்படம் 623 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் ரிலீஸான தமிழ் திரைப்படங்களிலேயே லியோ திரைப்படம் தான் அதிக வசூல் செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம், 607 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இந்த நிலையில், லியோ திரைப்படத்தை முடித்த கையுடன் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறார் நடிகர் விஜய்.

சென்னை 600028, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை எடுத்த வெங்கட் பிரபு, இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். லியோ பட ரிலீஸிற்கு முன்பே இதன் பட பூஜை நடத்தப்பட்ட நிலையில், அதற்கான வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் விஜய்யை இளமையான தோற்றத்தில் காண்பிக்க வெங்கட் பிரபு முடிவெடுத்துள்ளார். இதற்காக விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா, வெங்கட் பிரபு ஆகிய மூவரும் கலிபோர்னியா சென்றனர்.

- Advertisement -

அங்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து படத்தில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி அமரன், வைபவ், அஜ்மல், இவானா, யுகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் சூட்டிங் பணிகள் டெல்லி, தாய்லாந்து, துருக்கி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றன.

இந்த திரைப்படத்தில் விஜய் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் டைட்டில் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது. அந்தப் படத்திற்கு பாஸ், அல்லது பஸ்ஸில் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் வைரலானது. ஆனால் இதனை தயாரிப்பாளர் அர்ச்சனா திட்டவட்டமாக மறுத்தார். தற்போது இதற்கு G.O.A.T என பெயர் வைக்க வெங்கட் பிரபு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. Greatest Of All time என்பதை சுருக்கி G.O.A.T என்னும் வார்த்தையை பலரும் இணையத்தில் உபயோகித்து வரும் நிலையில், தற்போது அதுவே படத்திற்கு டைட்டிலாக இருக்கலாம் என கூறுவது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்