- Advertisement -
Homeபொழுதுபோக்குரிலீஸான ஒரே வாரத்தில் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட விடுதலை 2 படம், விரைவில் ஓடிடியில் வெளியாக...

ரிலீஸான ஒரே வாரத்தில் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட விடுதலை 2 படம், விரைவில் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு – தேதி பிக்ஸ் பண்ணியாச்சா?

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் விடுதலை 2, கடந்த 20ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. விஜய் சேதுபதி கலிய பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சூரி, மஞ்சு வாரியார், கிஷோர், கென்னி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

குறிப்பாக விடுதலை முதல் பாகத்தில் சூரி ஹீரோவாகவும், விஜய் சேதுபதி கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். ஆனால் விடுதலை 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், சூரி கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். மற்றபடி படம் முழுவதும் புரட்சி போராட்டாங்கள் என்று இருப்பது பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் வடசென்னை விசாரணை விடுதலை என 7வது படமாக வெளியான விடுதலை 2 படம், வசூல் ரீதியாக வெற்றியை பெற்றாலும் விமர்சன ரீதியாக இந்த படம் அந்தளவுக்கு ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பது தெளிவாகி விட்டது.

இந்த படம் வெளியாகி 10 நாட்களே ஆன நிலையில், ஒரே வாரத்தில் விடுதலை 2 படம் பல தியேட்டர்களில் இருந்து வெளியேறி விட்டது. பல தியேட்டர்களில் மேக்ஸ் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. பல திரையரங்குகுளில் காட்சிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. அடுத்தடுத்த புதிய படங்கள் வருகை காரணமாக, விடுதலை 2 தியேட்டரை விட்டு அகற்றப்படுகிறது.

- Advertisement -

விடுதலை 2 படம் உலகளவில் 42 கோடி ரூபாய், தமிழ் நாட்டில் 36 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை கூட எட்ட வாய்ப்பில்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். அதனால் மிக விரைவில் ஓடிடி தளத்தில் இந்த படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ஜீ5 ஓடிடி தளத்தில் ஒரு மணி நேரம் கூடுதல் காட்சிகளுடன் விடுதலை 2 படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. வருகிற ஜனவரி மாதம் 24ம் தேதி படத்தை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தியேட்டரில் 2 மணி நேரம் 45 நிமிடம் விடுதலை 2 படம் ஓடிய நிலையில். ஓடிடி தளத்தில் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் என்றால், அதையே 2 பாகங்களாக ரசிகர்கள் இரண்டு வேளைகளில் பார்க்க வேண்டியதுதான் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்