- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசனுக்கு ஐ லவ் யூ சொல்லப் போனேன், ஆனா அவர் அப்படி சொல்லி என்னை...

நடிகர் கமல்ஹாசனுக்கு ஐ லவ் யூ சொல்லப் போனேன், ஆனா அவர் அப்படி சொல்லி என்னை ஏமாத்திட்டார் – இதை சொன்னது அந்த பிரபல நடிகை தான்!

- Advertisement -

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்ற டயலாக்கை கேட்ட மறுகணமே சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் நினைவுக்கு வந்து விடுவார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி அவரை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது. மற்றவர்களின் குடும்ப விஷயங்களை அந்தரங்கங்களை பற்றிப் பேச நீங்கள் யார் என்ற விமர்சனமும் இந்த நிகழ்ச்சியில் அவர் மீது எழுந்தது.

எனினும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பலதரப்பு மக்கள் மத்தியிலும் லட்சுமி ராமகிருஷ்ணன் கவனமும் பாராட்டும் பெற்றார். தொடர்ந்து தமிழில் நாடோடிகள் நான் மகான் அல்ல யுத்தம் செய் பார்த்திபஜ் கனவு வேட்டைக்காரன் என பல திரைப்படங்களில் அவர் நடித்தார். சேரன் நாயகனாக நடித்த பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் நடிகை சினேகாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

- Advertisement -

கடந்த 2012ம் ஆண்டில் ஆரோகணம் என்ற படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து அவர் அம்மணி நெருங்கி வா முத்தமிடாதே ஹவுஸ் ஓனர் ஆர் யூ ஓகே பேபி உள்ளிட்ட சில படங்களையும் டைரக்ட் செய்திருக்கிறார். சமூக அக்கறை கொண்ட இந்த படங்கள் நல்ல திரைப்படங்களாக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கின்றன.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை காட்டி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் தனது கல்லூரி நாட்களில் நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த சம்பவம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது, நான் கல்லூரியில் படித்த போது நடிகர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகையாக இருந்தேன். அவரை மனசுக்குள் காதலித்தேன். அவரிடம் என் காதலை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசையுடன் நான் காத்திருந்தேன். அப்போது ஒரு முறை அவரை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்தது.

அவரை ஒருநாள் நான் நேரில் சந்தித்தேன். அவர் என்னை பார்த்தவுடன், என்னடி தங்கச்சி எப்படி இருக்கே? என்று கேட்டுவிட்டார். அவர் கூறிய அந்த தங்கச்சி என்னும் வார்த்தையை கேட்டவுடன் என் மனதில் இருந்த காதல் உணர்வுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டது. மரம் முறிந்து விழுந்தது போல் என் காதலை உணர்ந்தேன். அதனால் என் காதலை அவரிடம் சொல்லவே முடியவில்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்