நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதும் அதில் அப்பாவுக்கு சிநேகா, மகனுக்கு மீனாட்சி சவுத்ரி ஆகியார் ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்தின் கதை டைம் டிராவல் அடிப்படையாக கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் பெயர் அதாவது டைட்டில் முதலில் பாஸ் என்று கூறப்பட்டது. ஆனால் பாஸ் என்ற டைட்டில் இல்லை என, அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் அர்ச்சனா உறுதிபட தெரிவித்த நிலையில், விஜய் 68 படத்தின் டைட்டில் கோட் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதாவது எல்லா நேரத்திலும் தலைசிறந்த மனிதன் என்ற அர்த்தத்தை விளக்கும் வகையில் இந்த பெயர் என கூறப்படுகிறது.
ஆனால் இதை விஜய் 68 படத்தை இயக்கி வரும் இயக்குநர் வெங்கட்பிரபுவோ, விஜயோ, அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளோ, தயாரிப்பாளரோ கூறவில்லை. ஆனால் இதுதான் தலைப்பு என 90 சதவீதம் உறுதியாக நம்பலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆனால் புத்தாண்டு பரிசாக வரும் 31ம் தேதி மாலை படத்தின் பெயரை, படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது. அடுத்த நாள் ஜனவரி 1 அன்று படத்தின் செகன்ட் லுக் போஸ்டரையும் வெளியிட உள்ளது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. விஜய் 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என்ற தகவலும் வேகமாக பரவி வருகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதவா, மைக் மோகன், ஜெயராம், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி வெங்கட்பிரபுவின் நெருங்கிய நண்பர்கள் குழு சார்ந்த வைபவ், அஜய், யுகேந்திரன், வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.
விஜய் 68 படத்தில் புதிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இப்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகர் சுதீப் மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோரும் இணைய உள்ளனர். சுதீப், ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான். நான் ஈ, புலி, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கஞ்சா கருப்பும் விஜய் படத்தில் இணைகிறார். கஞ்சா கருப்பு காமெடி ரோலில் நடிப்பார். சுதீப் என்ன கேரக்டரில் வருகிறார் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.





