- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட பெத்தவங்க ஆசை இதுதான், 58 வயசுல சாதித்து காட்டிய நடிகர் முத்துக்காளை - இது...

என்னோட பெத்தவங்க ஆசை இதுதான், 58 வயசுல சாதித்து காட்டிய நடிகர் முத்துக்காளை – இது வேற லெவலா இருக்கே?

- Advertisement -

நடிகர் முத்துக்காளை, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒருவர்தான். பார்ப்பதற்கு ஒல்லியாக வெடவெட காணப்படும் அவர், ஸ்டண்ட் நடிகர் என்றால் நம்புவதற்கு ஆச்சரியமாக தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. முத்துக்காளை 18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.

முதலில், நெறைஞ்ச மனசுல என்ற விஜயகாந்த் நடித்த படத்தில், ஒரு சின்ன காமெடி ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து வடிவேலு காமெடி காட்சிகளில் துணை நடிகர்களில் ஒருவராக நடித்தார். வின்னர் படத்தில் வடிவேலுவை ட்ரை சைக்கிளில் அழைத்து வந்து அண்ணனை அடிச்சது எவன்டா? என கேள்வி கேட்டு, அடிவாங்கி ஓடிப் போவார்.

- Advertisement -

அடுத்து, நெற்றியில் மண்டை ஓடு வரைந்து, தனியாக நடந்துவரும் வடிவேலுவை மறித்து, திருப்பரங்குன்றம் மலை மேல இருந்து, ரெண்டு குதித்து விழுந்து ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோமா, என அவரிடம் வம்பு செய்து அடிப்பார். இப்படி பல காட்சிகளில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் முத்துக்காளை.

இம்சை அரசன் 23ம் புலிகேசியில் வண்டிக்காரன் வேடத்தில் வந்தேன் மன்னா, என வடிவேலுவிடம் சொல்லிவிட்டு, சீர்காழியில் எனது சித்தப்பா வீட்டில் கிடாவெட்டு விருந்து, அங்கு 2 நாட்கள் தங்கி, விழாவை சிறப்பித்து விட்டு வந்தேன் என கூறுவார். இப்படி ரசிகர்கள் மிகவும் ரசித்த பல காட்சிகளில், படங்களில் நடித்திருக்கிறார் முத்துக்காளை.

- Advertisement -

சின்ன வயதில் இருந்தே படிப்பின் மீது ஆர்வம் கொண்டவர் முத்துக்காளை. ஆனால் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படிப்பை தொடர முடியாமல் சினிமாவுக்குள் வந்துவிட்டா். என்றாலும் அவரது பெற்றோருக்கு முத்துக்காளை பெரிய அளவில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை கழகத்தில் பிஏ வரலாறு படித்து பட்டம் பெற்றார். அடுத்து 2019ம் ஆண்டு எம்ஏ தமிழ் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார். இப்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்து, வெற்றி பெற்றுள்ளார். இது முத்துக்காளை பெற்ற 3வது பட்டம். அடுத்து முனைவர் பட்டம் பெறப்போவதாக சொல்லும் முத்துக்காளை இப்போது வயது 58 என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்