- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68-ல் இணைந்த மூத்த நடிகை... இன்னும் யார் யாரெல்லாம் இணைய போறாங்கனே தெரியலையே...

தளபதி 68-ல் இணைந்த மூத்த நடிகை… இன்னும் யார் யாரெல்லாம் இணைய போறாங்கனே தெரியலையே…

- Advertisement -

2023 ஆம் ஆண்டில் இறுதி நாட்களில் இருக்கிறோம். இந்த சமயத்தில் நடப்பாண்டு வெளியான திரைப்படங்கள், அது குவித்த வசூல், விருப்பமான நடிகர் நடிகைகள் உள்பட பல்வேறு தகவல்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதே போல் அடுத்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படங்கள் குறிக்கும் அவர்கள் விவாதித்து வருகின்றனர். இதில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது விஜயின் 68வது திரைப்படம்.

இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ என இரண்டு திரைப்படங்களை கொடுத்த தளபதி விஜய், தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கிறார். இதில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிக்கிறாராம். இதில் இளமையான தோற்றத்தில் இதுவரை காண்பிக்க முடிவு செய்துள்ள வெங்கட் பிரபு, அதற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம்.

இதற்காக விஜய், வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர்கள் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் சமீபத்தில் கலிபோர்னியா சென்று வந்தனர். லியோ படத்தில் ரிலீசுக்கு முன்பே, தளபதி 68 திரைப்படத்தின் பட பூஜை பணிகள் நடைபெற்றன. இதன் வீடியோ லியோ திரைப்படம் வெளியானதும், ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இதில், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், இவானா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் உட்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். இதன் சூட்டிங், டெல்லி தாய்லாந்து துருக்கி மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்றது. அடுத்ததாக சென்னையில் படம்பிடிப்பை நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.

முதலில் பாஸ் அல்லது பசில் என பெயரிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதனை தயாரிப்பாளர் அர்ச்சனா திட்டவட்டமாக மறுத்தார். தற்போது இதற்கு கோட் என பெயரிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புத்தாண்டு தினத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்த வெங்கட் பிரபு, விரைவில் அப்டேட் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது புதிய தகவலாக, தளபதி 68 திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த நிலையில் விஜய் திரைப்படத்திலும் அவர் இணைந்து இருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

சற்று முன்