- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படம் நாளை ரிலீஸ் ஆகுமா? கடைசி நேரத்தில் கோர்ட் உத்தரவால் கிடுகிடுத்துப் போன சூர்யா...

கங்குவா படம் நாளை ரிலீஸ் ஆகுமா? கடைசி நேரத்தில் கோர்ட் உத்தரவால் கிடுகிடுத்துப் போன சூர்யா படக்குழு – என்னதான் ஆச்சு என்று ரசிகர்கள் குழப்பம்!

- Advertisement -

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யா 2 வேடங்களில் நடித்துள்ள கங்குவா படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மொத்தம் 11, 500 தியேட்டர்களில் கங்குவா படம் ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவால், இந்த படம் அறிவித்தபடி நாளை வெளியாகுமா என்பதில் குழப்பமும் சந்தேகமும் நீடிக்கிறது. ஏற்கனவே ரிலையன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நிலுவையில் இருந்த தொகையை ஸ்டுடியோ ஸ்கிரீன் தரப்பில் செலுத்தி, அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பான் இந்தியா படமாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கங்குவா படம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரச்னை ஏற்பட்டிருப்பது ரசிகர்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது.அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவர் ஏற்கனவே திவால் ஆனவராக அறிவிக்கப்பட்டவர். அவரது சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

- Advertisement -

அர்ஜூன் லால் சுந்தர் தாஸிடம் கடன் வாங்கியவர்களிடம் கடனை வசூலிக்கும் பணியையும் நீதிமன்ற சொத்தாட்சியர் செய்து வருகிறார். இதில் அர்ஜூன் லால் சுந்தர் தாஸிடம் கங்குவா படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் கடன் வாங்கியுள்ளது. அந்த கடன் தொகை 20 கோடி ரூபாயை 13ம் தேதிக்குள் ( இன்று) செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் கூறியிருக்கின்றனர்.

கங்குவா படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், அவ்வாறு 20 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில், கங்குவா படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதனால் கடைசி நேரத்தில் கங்குவா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த தொகையை விரைவில் செலுத்தி கங்குவா படத்தை அறிவித்தபடி நாளை ரிலீஸ் செய்வார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்