- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் அப்படி பண்ணுவார்னு நான் எதிர்பார்க்கல... கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் சொன்ன விஷயம்தான் இது...

லோகேஷ் கனகராஜ் அப்படி பண்ணுவார்னு நான் எதிர்பார்க்கல… கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் சொன்ன விஷயம்தான் இது…

- Advertisement -

ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன். தொடர்ந்து தமிழ் சினிமா மட்டுமல்ல, தெலுங்கு, இந்தி திரையுலகம் என அவர் பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சமீப நாட்களாக அவர் தமிழ் சினிமாவில் பெரிதாக தலை காட்டவில்லை. இப்படியான சூழலில் தற்போது ஆல்பம் ஒன்றை அவர் இசையமைத்து நடித்திருக்கிறார். இனிமேல் என ஆரம்பிக்கும் இந்த ஆல்பத்திற்கு, வரிகளை எழுதி இருக்கிறார் கமல்ஹாசன்.

- Advertisement -

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை தயாரித்திருக்கிறது. இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், ஆல்பத்தின் நாயகனாக நடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் தான். இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது தயாரிப்பிலும் இறங்கி இருக்கிறார்.

இப்படியான சூழலில் அவர் ஆல்பம் ஒன்றில் ஸ்ருதிஹாசன் உடன் டூயட் பாடி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பான டீசர் ஒன்று வெளியானது. பெரும் 18 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், அவர் ஸ்ருதிஹாசன் உடன் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

- Advertisement -

இதனைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். உங்கள் திரைப்படங்களில் காதலிக்கும் கதாநாயகிகளின் கழுத்தை அறுத்துவிட்டு, இங்கு மட்டும் டூயட் பாடுகிறீர்களா என்று நக்கல் ஆகவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இப்படியான சூழலில் இனிமேல் ஆல்பம் குறித்து பல தகவல்களை ஸ்ருதிஹாசன் பகிர்ந்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது,

முதலில் நாங்கள் லோகேஷ் கனகராஜ் இடம் கூறியபோது அவர் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு பேச்சுவார்த்தையின் மூலமாகவே அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தார். கேமராவில் அவர் வந்தால் நன்றாக இருக்கும் என எனக்கு தோன்றியது. அவர் அவ்வளவு பெரிய இயக்குனர், கிரியேட்டிவான ஒரு நபர். அவரை நான் இந்தப் பக்கம் அழைத்து வரும்போது இரண்டே வினாடிகளில் அவர் நடிகராக தன்னை மாற்றிக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்