- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா வாழ்விலும், அரசியல் வாழ்விலும் டூப் போடாதவர் விஜயகாந்த், ஜெயலலிதா- கருணாநிதி என்ற இரண்டு பெரிய...

சினிமா வாழ்விலும், அரசியல் வாழ்விலும் டூப் போடாதவர் விஜயகாந்த், ஜெயலலிதா- கருணாநிதி என்ற இரண்டு பெரிய ஆளுமைகளை எதிர்த்து அரசியலில் ஜெயித்தவர் – கவிஞர் வைரமுத்து புகழாரம்

- Advertisement -

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த், தனியார் மருத்துவமனையில் இன்று காலை 6 மணியளவில் காலமானார். அவரது உடல் தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளாமனோர் அங்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தந்தை விஜயகாந்தின் உடலை பார்த்து அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருவரும் கதறி கதறி அழுதனர். அவர்களை அழுவதை பார்த்து மனம் கலங்கிய விஜயகாந்த் மனைவி பிரமேலதாவும் மகன்களை கட்டிப்பிடித்து அழுதார். இப்படி விஜயகாந்த் மனைவி, மகன்கள் அழுவதை கண்டு அங்கிருந்த கட்சியினரும், ரசிகர்களும் கதறி அழுதனர்.

- Advertisement -

அங்கு வந்த நடிகர் டி ராஜேந்தர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், விஜயகாந்த் மறைவு எனக்கு மிகுந்த வேதனை தருகிறது. என் மகன் சிம்பு இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் என்னிடம் போனில் பேசினார். கேப்டன் மறைவை அறிந்து மிகவும் வருந்தினேன். என்னுடைய முதல் படம் காதல் அழிவதில்லை படத்தை துவக்கி வைத்தவர் அவர்தான்.

விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது என்னை வளர்த்து விட்டவரும் அவர்தான். என்னால் விமானம் பிடித்து அங்கு வரமுடியாது. அதனால் தயவுசெய்து நீங்கள் சென்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி, லட்சிய திமுக கட்சி தலைவராக நான் இங்கு வரவில்லை. கேப்டன் விஜயகாந்த் என்ற சிறந்த மனிதருக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறேன் என்று கூறினார்.

- Advertisement -

கவிஞர் வைரமுத்து விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் பேசுகையில், தன்னுடைய சினிமா வாழ்விலும், அரசியல் வாழ்விலும் டூப் போடாமல் உண்மையாக வாழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி என்று தமிழக அரசியலில் இரண்டு பெரிய ஆளுமைகள் இருந்தும் அரசியலுக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றவர்
விஜயகாந்த் என்று கூறினார்.

சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை கட்சி அலுவலகத்தில் நாளை மாலை வரை விஜயகாந்த் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. நாளை மாலை 4.45 மணிக்கு கட்சி அலுவலகத்திலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அவரது உடலை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வருவதால், கோயம்பேடு பகுதியில் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்