- Advertisement -
Homeபொழுதுபோக்கு“மாமன்னன்” ரத்னவேல் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒரு முழு படம், பிளான் போட்ட மோகன் ஜி,...

“மாமன்னன்” ரத்னவேல் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒரு முழு படம், பிளான் போட்ட மோகன் ஜி, பகத் பாசிலுக்கு பறந்த ஃபோன் கால்

- Advertisement -

“மாமன்னன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தபோது அதில் வடிவேலுவின் நடிப்பையும் பகத் பாசிலின் நடிப்பையும் ரசிகர்கள் புகழ்ந்தார்கள். அதே போல் அத்திரைப்படம் சொல்ல வந்த செய்தியும் சரியான முறையில் ரசிகர்களுக்குச் சென்றடைந்ததாகவே கருதப்பட்டது.

ஆனால் “மாமன்னன்” திரைப்படம் ஓடிடியில் வெளியானபோது அது அப்படியே தலைகீழாக மாறியது. ஆதிக்கத்தின் அதிகாரத்தின் குறியீடான ரத்னவேலு கதாபாத்திரத்தை சமூக வலைத்தளத்தில் செயல்பட்டு வரும் ஜாதி சார்ந்த குரூப்புகள் கொண்டாடத் தொடங்கினர். தமிழ் சினிமாவில் வெளிவந்த மாஸ் ஆன பாடல்களை பின்னணியாக ஓடவிட்டு ரத்னவேலு கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை உருவாக்கி வைரல் ஆக்கி வந்தனர்.

- Advertisement -

இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. “மாமன்னன்” திரைப்படம் சொல்ல வந்த செய்தியே எதிர்மாறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாக பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். இது மாரி செல்வராஜிற்கே அதிர்ச்சியை கொடுத்ததாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு மேலும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “மாமன்னன்” திரைப்படத்தின் ரத்னவேலு கதாபாத்திரம் மிக பிரபலமாக ஆன நிலையில் இயக்குனர் மோகன் ஜி, பகத் பாசிலுக்கு தொடர்புகொண்டு ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தின் பெயரை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் அதில் தாங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறினாராம்.

- Advertisement -

மோகன் ஜி இவ்வாறு கேட்டவுடன் பகத் பாசிலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டவிட்டதாம். “எனக்கு விருப்பமில்லை” என்று ஃபோனை துண்டித்தது மட்டுமல்லாது மோகன் ஜியின் தொலைப்பேசி எண்ணையும் பிளாக் செய்துவிட்டாராம்.

ரத்னவேலு கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆன போது பகத் பாசில், தன்னுடைய கவர் ஃபோட்டோவை மாற்றியது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. ஆனால் சில நாட்களிலேயே நடப்பது என்னவென்று அறிந்த பின் தனது கவர் ஃபோட்டோவை மாற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்